சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்கிற சி.டி.மணி மீது முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கள்ள துப்பாக்கி வைத்திருந்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் சென்னை மாநகரத்திற்கு புதியதாக சங்கர் ஜிவால் கமிஷனராக நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சி.டி.மணி ஆயுதங்களுடன் சென்னையில் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போரூர் மேம்பாலம் அருகில் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போரூர்மேம்பாலம்அருகேகாரில்வந்தபோதுதனிப்படைபோலீசார்சப்இன்ஸ்பெக்டர்கள்கனகராஜ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் மணியின் வண்டியை தடுத்து நிறுத்த முயன்றபோது சி.டி.மணிவண்டியைநிறுத்தாமல்துப்பாக்கியைஎடுத்துபாலகிருஷ்ணனின் நோக்கி சுட்டதாகவும் அதன்பிறகு மேம்பாலத்தில் இருந்து சி.டி. மணி தப்பிக்க எகிறி குதித்து கீழே விழுந்ததாகவும் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சி.டி.மணி சுட்டதில் தோல் பட்டையிலும் இடது காலிலும் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் காயமடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் சி.டி. மணிக்கு காயம் ஏற்பட்டதா இல்லையா என்று குறிப்பிடப்படவில்லை.
உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது இரண்டு நாட்களுக்கு முன்பு சிடி மணி நாவலூரில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி அவருக்கு தகவல் தெரியும் என்ற என்ற நோக்கத்தில் விசாரணை தொடங்கியது.
அதில் சிடி மணிக்கு தெரிந்த சில முக்கிய தகவல்களை போலீசார் வீடியோ வடிவில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.அதன் பிறகு சிடி மணியை என்கவுண்டர் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருந்தனர்.தி.மு.க பதவிக்கு வந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அது போன்ற செயல்கள் ஏதும் செய்யக்கூடாது.
சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடத்து உத்தரவு வந்ததால்.உடனே பாலகிருஷ்ணனை சிடி மணி சுட்டதாக ஒரு பொய்யான தகவலை சொல்ல ஆரம்பித்தனர்.போலீஸ் சொன்ன பொய்யால்எழுந்த சந்தேகங்கள்.
கேள்வி. 1.
சி.டி.மணி சுட்ட துப்பாக்கி எங்கே?
அந்த துப்பாக்கியின் ரகம் என்ன?
போலீசாரை சீடி மணி நோக்கி சுட்ட போது அவருடன் இருந்தவர்கள் எத்தனை பேர்?
எத்தனை பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்?
உண்மை சம்பவத்தை ஏன் மறைக்க வேண்டும்?
போரூர் மேம்பாலம் அருகே சப் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் பாலகிருஷ்ணன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது உடனிருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் யார்?இது போன்றஎந்ததகவல்களையும்போலீசார்வெளியிட்டசெய்திக்குறிப்பில்தெரிவிக்கவில்லை.சி.டி.மணியின் தரப்பு வழக்கறிஞர்கள் மணியை பிடித்தது ஒரு இடத்தில் போலீசார் கைது செய்ததாக சொல்வது ஒரு இடத்தில்,
சப் இன்ஸ்பெக்டரை மணி சுட்ட தகவலை உடனடியாக ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கவில்லை. என்று கேள்வி எழுப்புகின்றனர் சி.டி.மணி விவகாரத்தில் போலீசார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உண்மையை வெளிப்படையாக சொன்னால் நன்றாக இருக்கும்.
சி.டி. மணி ஒன்றும் யோக்கிய சிகாமணி அல்ல அவர் நாடு போற்றும் நல்ல வரும் அல்ல அதனால் போலீசார் வீணாய் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.