சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் திமுக கவுன்சிலர் ஒருவர் பற்றி பல புகார்களை உடன்பிறப்புகளே திமுக தலைமைக்கும், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். அவர் செய்து வரும் தில்லாலங்கடி வேலைகளால் உடன்பிறப்புகளே கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அதைப் பற்றி தீவிரமாக விசாரித்து ஒரு செய்தி வெளியிடுங்கள் என்று நமது அலுவலகத்திற்கு பல புகார்கள் வந்துள்ளது. நமக்கு வந்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள செய்திகளை வாசகர்களுக்கும் திமுக உடன் பிறப்புகளுக்கும் நாம் அப்படியே தருகிறோம். உண்மை என்ன என்பதை தலைமை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை ஆட்டி படைக்கும் ”குட்டி சேகர் பாபு”; பகீர் கிளப்பும் பின்னணி தகவல்!
தமிழ்நாடு முழுவதும் திமுகவினரின் அராஜகம் தலைவிரித்து ஆடி வருகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே சமயம் ”எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை தந்து கொண்டு இருக்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல திமுகவின் நற்பெயரை சென்னை மாமன்ற திமுக 114 வது கவுன்சிலர் மதன் மோகன் என்கிற ‘குட்டி சேகர்பாபு ‘ இவர் அமைச்சர் சேகர் பாபுவைப்போல வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று ஒரு பகீர் தகவலை சொல்கிறார்கள் சேப்பாக்கம் திமுக உடன் பிறப்புக்கள். யார் அவர் என விசாரித்தோம்.
திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் இது வரை அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் சேப்பாக்கம் தொகுதி திமுகவினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் இருந்து கொண்டு அத்தனை ஃபிராடு தனங்களையும் அரங்கேற்றி வருகிறார் அந்த ‘குட்டி சேகர்பாபு ‘ இவர் தான் அவர்
‘‘குட்டி சேகர் பாபு” – பெயர் வந்தது எப்படி?
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் இவன் தொல்லை தாங்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை.. ‘சாட்சாத்’ சேப்பாக்கம் பகுதி செயலாளர் ” மதன் மோகன்” தான் அந்த குட்டி சேகர்பாபு’.
”குட்டி சேகர் பாபு” என சொல்வதற்கு காரணம், சேகர் பாபுவின் கண் அசைவுக்காக காத்துக்கிடந்து காரியங்களை கனகச்சிதமாக செய்து முடிப்பதில் கில்லாடி அது மட்டுமல்ல அவருக்கு மதன் வலது கை என்று சொல்லி வருவதால் திமுகவினரே மதன் மோகனை ”குட்டி சேகர் பாபு” என்றே அழைக்கின்றனர்.
யார் இந்த மதன் மோகன்?
கடந்த 1995-96 காலகட்டத்தில் சேப்பாக்கத்தில் எல்.ராஜேந்திரனுக்கு என்பவருக்கு (இப்போது அமமுகவில் உள்ளார்) பைக் ஓட்டுவதற்கு டிரைவராக பணியில் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கியவர் தான் இந்த மதன் மோகன்.
இவருடைய தாயார் இன்ஸ்டால்மெண்டில் புடவை வியாபாரம் செய்தவர். தந்தை குடிநீர் வாரியத்தில் ஒரு கடை நிலை ஊழியர். இவர் 2/44, கலவை செட்டி தெருவில் NNR என்கிற மீன் வியாபாரிக்கு சொந்தமான சிங்கிள் பெட்ரூம் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வாடகை தராமல் ஏமாற்றியதால் பின்பு அந்த வீட்டு உரிமையாளர் இவரை வெளியேற்றினார்.
மதன் மோகனுக்கு அளவிட முடியாத அளவுக்கு சொத்து ..
சொந்தமாக வீடு இல்லாமல் தெரு தெருவாக வாடகைக்கு இடம் மாறி வசித்த இவர் பெயரிலும், இவரது மனைவி பெயரிலும் தற்போது உள்ள சொத்துக்கள் ஏராளம். மதிப்பிட முடியாத அளவிற்கு உள்ளது என்று வாயை பிளந்து சொல்கின்றனர் சில மூத்த உ.பிக்கள்.
இவருக்கு சென்னையில் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் பகுதியில் உள்ள ” No 3 கிருஷ்ணப்பசெட்டி தெரு, No.21. குட்டி நாயகன் தெரு, No.86 சாமி நாயக்கன் தெரு சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சேப்பாக்கம் CNK சாலையில் மேன்ஷன்” இது மட்டும் தான் மக்களுக்கு தெரிந்த சொத்து பட்டியல், இது தவிர இன்னும் பல நிறைய சொத்துக்கள் உள்ளாதாக உடன் பிறப்புக்கள்சொல்லுகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மருமகன் கிரி என்பவருடன் தினமும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் அமர்ந்து ‘தண்ணி’ அடித்துக் கொண்டு, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் காண்ட்ராக்ட்களை (மண்டலம் 9) தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கிக்கொடுத்து பெரிய அளவுக்கு லாபம் பார்த்தவர். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் துணிந்து செய்பவர் தான் மதன் மோகன்.
திமுக கவுன்சிலர் மதன் மோகனுக்கு சொந்தமான மேன்ஷன்களில் சொக்க வைக்கும் ‘மஜா’ பிசினஸ்.
இவர், கவுன்சிலராக உள்ள வார்டில் நிறைய மேன்ஷன்கள் உள்ளதால் அங்கு நடக்கும் ‘பலான’ பூஜைகளுக்காக நல்ல வசூல் மழை பொழிவதோடு, இவருக்கு சொந்தமான மேன்ஷனில் விடிய விடிய ‘பலான’ மஜா பிசினஸ் நடப்பதாக சொல்கின்றனர்.
பாலியல் குற்றவாளிக்கு பாதுகாப்பு.
சமீபத்தில் சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோயில் குருக்கள் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கினார். குருக்களின் நண்பர் சிந்தாதிரிப்பேட்டைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபதி மூலம் மதன்மோகன் தான் குருக்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஜாமீன் வாங்கிக் கொடுத்து லட்சக்கணக்கில் கட்டிங் வாங்கியதாகவும் அரசல்புரசலாக பேசி வருகின்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் கடைகளில் கொள்ளை.
சிந்தாதிரிப்பேட்டை புதிய மீன் மார்க்கெட்டில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு ரூ.25000 நன்கொடை மற்றும் மாத வாடகை ரூ.6500 பகுதிச்செயலாளர் மதன் மூலம் வசூல் செய்யப்படுவதாக ஏழை மற்றும் சாலையோர மீன் வியாபாரிகள் பகிரங்கமாக புலம்பி வருகின்றனர். இது எதற்கும் எவ்வித ரசீதும் தருவதில்லை. மீன் மார்க்கெட்டில் லோடு இறக்கும் போது மீன் பாக்ஸ்களுக்கு தனி வசூல் நடக்கிறது. இதில் ஒரு பைசாகூட அரசாங்கத்திற்கு போய்ச் சேருவதில்லை எல்லாம் மதன்மோகன் பாக்கெட்டுக்குத்தான் போகிறது. கட்டிங் தராத வியாபாரிகளை மீன் பாக்ஸ்களை இறக்க விடாமல் காவல் துறையினர் மூலம் தடுத்து தொந்தரவு செய்வதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர். சிந்தாதிரிப்பேட்டை மீன் வியாபாரிகள்.
புதிய வீடு கட்டணுமா?.. ஒரு ரசீது போடுங்க சார்.
இந்த தொகுதியில் வீடு கட்டும் அனைவரும் ஒரு பெரும் தொகையை இவருக்கு தந்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த வீடு நிம்மதியாக கட்ட முடியாது.
அப்படி கட்ட வேண்டும் என்றால் இவர் சொல்லும் பினாமி நபருக்கே அந்த வீடு கட்டும் காண்ட்ராக்டை தர வேண்டும். அப்படி தந்தால் மட்டும் தான் இந்த தொகுதியில் வீடுகளை கட்ட முடியும். ஆட்சி மாறினால் வீடு கட்டிக் கொள்ளலாம் என்று இப்போது நிறைய பேர் வீடு கட்டாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதன் மோகன் செய்யும் சேட்டைகள் சின்னவருக்கு தெரியுமா.?
இவர் செய்யும் சேட்டைகளை யாராவது தட்டிக் கேட்டால், ”சின்னவர் சொல்வதைத்தான் நான் செய்கிறேன். சின்னவரின் பி.ஏ. வாக உள்ள மா.க. செந்தில் தான் இவரின் தாரக மந்திரம் என்கிறார்கள் உ.பிக்கள். அது மட்டுமல்லாமல் அமைச்சர் சேகர் பாபு பெயர் சொல்லி பல கட்ட பஞ்சாயத்துக்களை செய்து வருகிறார். அதனால் தான் இவருக்கு குட்டி சேகர் பாபு என பெயர் வந்தது என்கின்றனர் உபிக்கள். சின்னவர் பெயரையும் அமைச்சர் பெயரையும் செல்லி மிரட்டி வருவதால் தொகுதிக்குள் கட்சியின் பெயர் கெடுவதாக திமுகவினர் மதன்மோகன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். சேகர்பாபு தயவு இருப்பதால் எந்த புகார் கொடுத்தாலும் இவர் தப்பித்து விடுகிறார்.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் திமுகவுக்கு ஆபத்து.
”குட்டி சேகர் பாபு” என்று அழைக்கப்படும் மதன் மோகனின் செயல்பாடுகள் திமுக பெயரை நாசம் செய்து வருவதால் வருகிற 2026 தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு பெரும் பின்னடைவு வந்துவிடும். அதற்கு முன் திமுக தலைமை 114 வார்டு திமுக கவுன்சிலரும் பகுதி செயலாளருமான மதன் மோகன் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த உடன் பிறப்புகளின் ஆசையும், விருப்பமும். திமுக கட்சி தலைவர் அமைச்சர் பொன்முடி மீதே நடவடிக்கை எடுத்தவர் இந்த சுண்டக்கா மீது நடவடிக்கை எடுக்காமலா இருப்பார். இவரின் சொத்து மதிப்பு தற்போது பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்.
இந்த செய்தி குறித்து கவுன்சிலர் மதன் மோகன் அவரது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.