ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் ஒய் ஜி. மதுவந்தி. சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆசியானா அபார்ட்மெண்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கினார்.
அதற்காக 2010ம் ஆண்டு கிண்டியில் உள்ள இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் 1 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
சில மாதங்கள் மட்டுமே தவணை செலுத்திய மது வந்தி பின்னர் தவனை தொகையை கட்டாமல் இருந்திருக்கிறார்.
பணம் கட்ட சொல்லி பைனான்ஸ் நிறுவனம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மதுவந்தி பணம் கட்டவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கில் மதுவந்தியின் வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வீட்டுக்க சீல் வைக்கப்பட்டது.
அப்போது மதுவந்தி வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி மிகவும் கேவலமாக இருந்தது.
இந்நிலையில் இந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதாக சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் நாளிதழ் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்க 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும், சொத்தின் அடிப்படையான தொகை ரூ.1.50 கோடி என்று தெரிவித்துள்ளது.