chennireporters.com

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.

கோகுல் ராஜ் தனது காதலி சுவாதியுடன்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் இன்று தீர்ப்பளித்தார்

ஆணவ கொலையாளி யுவராஜ்.

2015-ம் ஆண்டில் நடை பெற்ற நாட்டையே உலுக்கிய இந்த ஆணவ கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.7 ஆண்டுகாலம் நடை பெற்ற இந்த கொலை வழக்கின் முக்கிய திருப்பங்கள்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியை காதலித்து வந்தார்.

சுவாதியுடன் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கோகுல் ராஜ் காணாமல் போனார்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.இது தொடர்பாக திருச்செங்கோடு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் கோகுல் ராஜை கடத்தி கொலை செய்து ஜூன் 24-ம் தேதி பள்ளிபாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடலை போட்டுவிட்டு சென்றனர்.

கோகுல்ராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

பிரேத பரிசோதனை நடை பெற்ற நிலையில் குற்றவாளிகளை பிடித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர்.அதனையடுத்து முதற்கட்டமாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ப.மோகன் அரசு தரப்பு வழக்கறிஞர்.

இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் அவருடைய ஆட்களுடன் கோகுல்ராஜ் சென்றதற்கான ஆதாரம் சி.சி.டி.வியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து வழக்கை விசாரித்தனர்.

கோகுல் ராஜ் கொலை வழக்கை விசாரித்து தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலைக்கு யுவராஜ் தான் காரணம் என்று சந்தேகம் எழுந்தது.

பின்னர் கோகுல்ராஜ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.யுவராஜ் தன்னை இந்த வழக்கில் சேர்த்ததற்கு உயர் அதிகாரிகளே காரணம் என்றும் தன் மீது பொய் வழக்குகள் போட்டு இருப்பதாகவும் புகார் அளித்தார்.

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அக்டோபர் 11-ம் தேதி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரண் அடைந்தார்.இந்த வழக்கு விசாரணை வன் கொடுமை
தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு வழக்கறிஞரை மாற்ற தொடர்ந்த வழக்கு விசாரணை கடந்த 2009-ம் ஆண்டு மே 5-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் எனவும் 5 பேரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!