சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலியின் உடலை மீண்டும் மறு பிரேதசோதனை செய்யவேண்டும் மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது சமூக செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கனிம வளக்கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல உறுதிமிக்கப் போராட்டத்தால் நிலைமைகள் மாறும் என்பது உறுதியாகிவிட்டது. ஈகியர் ஜகுபர் அலி உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கொலையாளிகளுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் கரூர் குப்பம் விவசாயி ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரி உரிமையாளர்களால் 10-09-2022 வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட பொழுது, காவல்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் சதித்திட்டம் தீட்டி அவருடைய உடலை குடும்பத்தினர் மற்றும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
![]()
விவசாயி ஜெகநாதன் உடலை வாங்க மறுத்து போராடிய பொழுது, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர், போராட்ட குழுவினர் மற்றும் குடும்பத்தினரிடம் மீண்டும் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்..
ஆனால் பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி மருத்துவர். பிரபுசங்கர் ஐஏஎஸ் அவர்கள் விவசாயி ஜெகநாதன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய விடாமல் காவல்துறையினரிடம் இணைந்து சதித்திட்டம் தீட்டி செயல்பட்டார்.
முகிலன் வெளியே இருக்கும் வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோதமாக செயல்பட முடியாது எனக் கருதி,
சட்ட விரோதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் ஆகியோரை சட்ட விரோதமாக தூக்கி கடத்திச் சென்றனர்.
அவரை காவல் வாகனத்தில் நாள் முழுக்க வாகனத்தில் வைத்துக் கொண்டு மாவட்டம் முழுக்க சுற்றி அடித்து வைத்துக் கொண்டு, படுகொலை செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் மனைவி மற்றும் குடும்பத்தினரை ரவுடி போல் நேரில் அழைத்து மிரட்டி ( விவசாயி ஜெகநாதன் மகனை கல்லூரியில் படிக்க முடியாதவாறு செய்து விடுவேன் என்பது உட்பட பல்வேறு வகையில்) அச்சுறுத்தி பணிய வைத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யாமல் தடயங்களை மறைத்து, உடலை பெற வைக்க கையெழுத்து பெற்று காவல்துறையினர் பாதுகாப்போடு உடலைக் கொண்டு சென்று கரூர்மின் மயானத்தில் வைத்து எரித்துவிட்டனர்.
விவசாயி ஜெகநாதன் உடலில் கால் பகுதி வெட்டப்பட்டு துண்டாகியும், வாகனத்தில் பலமுறை ஏற்றி கால்களை சிதைத்ததையும் சான்றுகள் எதுவும் இல்லாதபடி , யாரும் நேரில் அதை பார்த்து படம் எடுக்க முடியாத படியும் மறைக்க செய்தனர்.
சதி நடவடிக்கை நிறைவேறிய பின்பே, அதாவது விவசாயி ஜெகநாதன் உடல் எரியூட்டப்பட்டு சாம்பல் ஆகிய பின்பே, அன்று இரவில் முகிலன் மற்றும் சண்முகம் ஆகியோரை கரூர் பசுபதி பாளையம் காவல்நிலையம் கொண்டு வந்து விடுவித்தனர். எனவே இந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.
தற்போது, திருமயம் மருத்துவமனையில் முறையாக பிரேத பரிசோதனை செய்யாத நிலையில் புதைக்கப்பட்ட ஈகியர் ஜகுபர் அலி உடலை தற்போது மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஈகியர் ஜகுபர் அலி படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை மக்கள் போராட்டம் ஓயாது. விழிப்புணர்வோடு செயல்படுவோம் சமூக செயல்பாட்டாளர்கள் உயிரை பாதுகாப்போம் . என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியை கொலை செய்ய காரணமாக அமைந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து மூன்று மாதத்தில் வடக்கு விசாரணையை முடித்து அனைவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்கிற ஒட்டுமொத்த சமூக செயல்பாட்டாளர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
அண்மையில் தமிழக அரசு பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்தால் அவர்கள் மீது தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு இதழில் வெளியிடப்பட்டது.
அதேபோல சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி அதை அரசு இதழில் வெளியிட வேண்டும் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
