chennireporters.com

பல கோடி ரூபாய் மணல் கொள்ளை சிக்கும் முக்கிய வி.ஐ.பி.கள்.

மணல் குவாரி கொள்ளை வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் கனிமவளத் துறையின் உதவி இயக்குனர் எஸ் சபியா கைது பின்னணில், இதில் தொடர்புடைய மாவட்ட நிர்வாக பெண் அதிகாரியின் கணவரும் விரைவில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

கனிமவள உதவி இயக்குனர் எஸ் சபியா (38)

திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் கிராமம் அருகே கேரள மாநிலம் பத்தனம் திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தில் எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க 2019 ல் அரசு அனுமதி வழங்கியது .

ஆனால் இதற்கான இயந்திரத்தை எதுவும் பயன்படுத்தாமல் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணலை அல்லியும், ஆற்றுப் படுக் கைகளில் உள்ள மணலை சட்டத்திற்கு புறம்பாக லாரிகளில் எடுத்து சுத்தப்படுத்தி கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

உள்ளூர் அதிகாரிகள் முதல் மாவட்ட நிர்வாகம் கலெக்டர் வரை கண்டு கொள்ளாத நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர். சேரன்மாதேவி சப் கலெக்டர் தீபக் தயாள் முறைகேடான மணல் குவாரியை சீல் வைத்து ரூபாய் 9கோடியே 50 பது லட்சம் அபராதம் விதித்தார்.

சுமார் 2000 மணல் லாரிகள் வரை பறிமுதல் செய்யப்பட்டது.மணல் கடத்தலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.11 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இதில் சமீர் (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் அங்கு பணி புரியும் சுங்கத் துறை உதவி இயக்குனர் சபியாவின் உறவினர் என அறியப்பட்டார்.

கோடிக்கணக்கில் மணல் கொள்ளையில் தொடர்புடைய முக்கிய நபர்கள் இவ்வழக்கில் சிக்காத நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீ சாருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மதுரை டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார், மணல் கொள்ளையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனுவேல் ராஜனிடம் மீண்டும் விசாரணையை துவக்கினர்.

இதில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க பிஷப் சாமுவேல் திரோனஸ்( 69) என்ற பாதிரியார் கைது செய்யப்பட்டார் அவரோடு சேர்ந்து ஐந்து பிஷப் பாதிரியார்களும் கைது செய்யப்பட்டனர்.

பாதிரியார் பிஷப் சாமுவேல் திரோனஸ் (69)

கல்லிடைக்குறிச்சி திமுக பிரமுகர் குமாரும் இதில் சிக்கினார் .கைதான பாதிரியார்கள் சிலர் உடனடியாக ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.இதில் கைது செய்யப்பட்ட சமீர் என்பவரை விசாரித்ததில் இவருக்கும் 2019ம் ஆண்டில் உதவி கனிமவள இயக்குனராக இருந்த சபியா (38) உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு கனிம வளத்துறை உதவி இயக்குனர் சபியாவை கைது செய்தனர் .பின்பு ஐந்தாவது மாஜிஸ்ட்ரேட் விஜயலட்சுமி முன்பு ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சபியா நீலகிரி உதவி கனிமவளத் துறை இயக்குனராக பணி செய்து வந்ததும் இவரின் கணவர் தான் மணல் கொள்ளை வழக்கில் கைதான சமீர் என்பது தெரியவந்தது.

சபியாவை கைது செய்து அழைத்துச் செல்லும் சிபிசிஐடி போலீசார்

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இந்த மிகப்பெரிய மணல் கொள்ளை வழக்கில் தற்போது உதவி இயக்குனர் சபியா கைது நடவடிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத் தை சார்ந்த பலர் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட உயர் அதிகாரி பொறுப்பில் இருக்கும் ஒருவரின் கணவரும் இதில் விரைவில் சிக்குவார்: எனவும் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடிக்கணக்கில் நடந்த இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஏன் இன்னும் சம்பந்தப்பட்ட துறை மந்திரி அமைதி காக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட போலீசாரும் இவரிடம் ஏன் தற்போது வரை விசாரணை தொடர்பாக அணுகவில்லை என்பதும் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க.!