மனோஜ் பாரதி திடீர் மரணம். என்ன காரணம்? நடந்ததென்ன? இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார்.
இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பலருக்கும் பரீட்சயமான மனோஜ், திடீரென மரணித்த செய்தி பலரையும் அதிர வைத்துள்ளது. என்ன நடந்தது? அவருக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தபோது தகவல்கள் கிடைத்துள்ளன.48 வயதாகும் மனோஜ் பாரதிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இதய பிரச்னையை சரி செய்துவிடலாம் என்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இப்படியாக, கடந்த 6 நாட்களுக்கு முன்பாகத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் மனோஜ் பாரதி.
இந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும், இன்றைய தினம் அவரது உயிர் பிரிந்தது. சென்னை சேத்பட்டில் இருக்கும் வீட்டில் இருந்தபோது இன்று மாலை 6 மணியளவில் மனோஜ் பாரதி மரணித்துள்ளார். மலையாள நடிகை நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட மனோஜுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், அவரது மறைவு உறவினர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தாஜ்மகாலுக்குப் பிறகு சில படங்களில் நடித்துள்ள மனோஜ் பாரதி, மார்கழி திங்கல் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மனோஜ் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.