திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கு நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன் அம்மக்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்டு
ஸ்டாலின் தான் வராறு தளபதி தளபதி எங்கள் தளபதி ஆகிய பாடல்களை பாடி மகிழ்ச்சியைவெளிப்படுத்தினர்.
பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர்,நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, குடியிருப்பு பட்டா மற்றும்
சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் என சுமார் இருநூறு பயனாளிகளுக்கு முதலமைச்சர் நல உதவி திட்டங்களை வழங்கினார்.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் , நரிக்குறவர்கள் மட்டுமின்றி எளிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
தற்போது அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.சாதாரண மக்கள் கூட தங்களது வீட்டிற்குள் வர தயங்கும் காலத்தில், முதலமைச்சரே வீடு தேடி வந்தது
எங்களுக்கு மன மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர் இந்த நரிக்குறவர் இன மக்கள். அரசின் இலக்கை எட்டவும் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.
முதல்வரை தனது வீட்டிற்கு அழைத்திருந்த மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சருக்கு, இட்லியும் நாட்டுக்கோழி குழம்பும் பரிமாறப்பட்டது.
அதனை சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிகளுக்கும் உட்டி விட்டார். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
தன்னுடைய வேண்டு கோளை ஏற்று எங்கள் வீட்டிற்கு வந்து முதலமைச்சர் உணவருந்தியது மிகவும் மகிழ்ச்சிஅளிப்பதாக மாணவி திவ்யா தெரிவித்தார்
மேலும், எளிய மக்களாகிய எங்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நரிக்குறவர் பெண் மனோரமா தெரிவித்தார்.