நினைவிருக்கிறதா? ஒரு இனம் தனது நிலத்தில் இருந்து துரத்தப்படுகிறது!
கடற்கரை மணல் பரப்பில் கண்ணீரிலும் தண்ணீரிலும் தவிக்கிறது!
குண்டு மழை பொழிந்து குருதியில் புரள்கிறது!
பாஸ்பரசு எரி நெருப்பில் கொத்து குண்டு வலையிலும் துடித்தது!
உலகம் எப்பொழுதும் போல வேடிக்கை பார்த்தது..
#மே_இனப்படுகொலை_நாட்கள்
உலக வல்லாதிக்க அயோக்கிய நாடுகளுடன் இலங்கை இராணுவமும் இணைந்து ஈழத்தில் எம் தமிழின மக்களை இன அழிப்பு செய்த நாள் இன்று.
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கும், விதையாய் விழுந்த மண்டியிடாத
விடுதலைப் புலிகளுக்கும் வீரவணக்கம்
சிங்களத்தின் கோரமான, கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழ் மக்கள் ஆயிரமாயிரமாய், கொத்துக் கொத்தாய்க் கொன்றொழிக்கப்பட்டனர்.
பெரும் எண்ணிக்கையானோர் அங்கவீனமாக்கப்பட்டனர்.
பொதுமக்கள் சொத்துக்களும்இயற்கையும் பெருமளவில் நாசம் செய்யப்பட்டன.
நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் வகையிலானதோர் இனவழிப்பு உலகின் பலமிக்க அரசுகளின் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது.
உலக நாடுகளின் நலன்கள் என்ற சமன்பாட்டுக்கமைய இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிய ஒரு சிறிய தேசத்தின் குரல்வளை நசுக்கப்பட்டது. இவ் இனவழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் தொகை 1,40,000 க்கும் அதிகம் என முன்னாள் மன்னார் ஆயர் இராசப்பு ஆண்டகை அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள்சபையின் உள்ளக ஆய்வு அறிக்கையொன்று குறைந்தது 70,000 மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான நம்பகமான தகவல்கள் உண்டு எனத் தெரிவித்தது. தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கெதிராக அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப் பேரவை இவ் இனவழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்தது. வடக்கு மாகாண சபையும் இத்தகையதொரு தீர்மானத்தை எடுத்திருந்தது. உலகின் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களாலும் தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. கனடா நாடாளுமன்றம் மே 18 இனை தமிழின அழிப்பு நினைவு நாளாக பிரகடனம் செய்திருக்கிறது.
இருந்த போதும், இக் குரல்கள் எல்லாம் தமது நலன்களுக்காக அம்மணமாக ஆடும் வலு மிக்க அனைத்துலக அரசுகளின் காதுகளில் இன்று வரை விழவே இல்லை. நித்திரை கொள்வதுபோல் நடிப்பவர்களை எவ்வாறுதான் எழுப்புவது?
இருந்தும், நீதிக்கான குரலின் தார்மீகபலத்தில் நம்பிக்கை வைத்து தமது நீதிக்கான போராட்டத்தைத் தமிழர் தேசம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல உலக வல்லாதிக்க அயோக்கிய நாடுகளுடன் இலங்கை இராணுவமும் இணைந்து ஈழத்தில் எம் தமிழின மக்களை இன அழிப்பு செய்த நாள்..
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கும், விதையாய் விழுந்த மண்டியிடாத
விடுதலைப் புலிகளுக்கும் வீரவணக்கம்.