50 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் படித்த நண்பர்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தினருடன் சந்தித்து பேசிய நெகிழ்ச்சியான தருணம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
1976 முதல் 1983 ஆம் ஆண்டு கால கட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மற்றும் தங்களது குடும்பத்தினருடன் தமிழகமெங்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.

இந்த நிலையில் முகநூல் வாயிலாக ஒவ்வொரு நண்பர்களையும் தேடிப்பிடித்து அவர்களை தொடர்பு கொண்டு பழைய நண்பர்கள் ஒன்று கூடி ஒரு கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்று நண்பர்கள் முடிவு செய்தனர் அதன்படி 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடி சந்தித்து பேசினர்.
ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியாமல் தங்களது பள்ளிப் பருவத்தில் வகுப்பில் என்ன புனைப் பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டார்களோ அந்த பெயர்களை சொல்லி மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். நீண்ட காலம் கழித்து ஏறக்குறைய 50ஆண்டுகள் கழித்து சந்தித்த பிறகு ஒவ்வொரு மாணவர்களும் தங்களது ஆனந்த கண்ணீரில் தங்களது பள்ளி படிப்பை நினைத்து நிகழ்ச்சியில் மனம் உருகி பேசினார்கள்.
தங்களுடன் படித்த சில மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தனியார் நிறுவனங்களிலும் உயரிய பொறுப்புகளிலும் தற்போது பதவி வகித்து வருகின்றனர். அவர்களது குடும்பத்துப் பிள்ளைகளும் நல்ல முறையில் படித்து ஆளாக்கப்பட்டுள்ளனர்.
விழா தொடங்கியதும் ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாக மேடைக்கு வந்து தாங்கள் யார் தங்கள் பெயர் என்ன என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்கள்.


அவர்களது மனதில் பழைய பள்ளி பருவ நினைவுகளும் கல்லூரி நினைவுகளும் நெஞ்சில் நிழலாட தொடங்கின. இதனால் அனைத்து மாணவர், மாணவிகளும் தங்களது குடும்பத்தினருடன் சந்தோஷ கண்ணீரில் மிதந்தனர் பிறகு பேசத் தொடங்கிய ஆசிரியர்கள் தங்கள் அர்ப்பணிப்போடு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தந்ததாகவும் தங்களது மாணவர்கள் நீண்ட காலம் கழித்து தங்களை அடைத்து பெருமைப்படுத்தியதற்கு நாங்கள் நன்றி கடன் பெற்று இருக்கிறோம் என்றும் நெகிழ்ச்சியாக பேசினார்கள்.
ஆசிரியர்களின் நல்ல வழிகாட்டுதலினாலேயே நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாணவர்கள் சார்பாக எண் N.குப்புசாமி
தெலுங்கு மாணவர்கள் சார்பாக. A. சுப்பிரமணியம். K.N. ஜனார்த்தனம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். 
சிறப்பு விருந்தினராக வந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளிக்கு இவர்கள் சார்பாக ஆர்ஓ பிளான்ட் வழங்கப்பட்டது. இதனை அந்தப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. ஏழுமலை அவர்களிடம் வழங்கப்பட்டது
