chennireporters.com

#Midnight Tragedy; நள்ளிரவு சோகம் இளம் பெண்ணின் உயிரை பலி வாங்கிய பால் பண்ணை அதிகாரிகள்.

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் பண்ணையில்  நள்ளிரவில் பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aavin milk supplied by farmers stolen, adulterated in Tiruvallur

“ஆவின் பால் பண்ணையில் தலை துண்டாகி பெண் தொழிலாளர் பலி, கேள்விக்குறியான பணியாளர்கள் பாதுகாப்பு.”Aavin Kanchipuram Tiruvallur District co-operative Milk Union Limited |  Chennaiதிருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று (20.08 2024) இரவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தியின் போது பணியில் இருந்த உமா மகேஸ்வரி என்கிற பெண் ஒப்பந்த தொழிலாளரின் சுடிதார் துப்பட்டா இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் மாட்டிக் கொண்டு இழுத்த போது தலைமுடியும் சேர்த்து சிக்கிக் கொண்டதால் அவரது தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பலியான இளம் தாயான உமா மகேஸ்வரி அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பலியான பெண்ணின் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடவும், அந்த குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்திடவும் ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பால் பண்ணையில் பணி செய்யும் பணியாளர்களின் தலைமுடி உதிர்ந்து பால் மற்றும் பால் பொருட்களில் கலந்து விடக்கூடாது என்பதற்காக தலையில் அதற்கான கவச தொப்பி அணிவது வழக்கம், அதுமட்டுமின்றி மேலாடைகள் இது போன்ற தருணங்களில் இயந்திரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு வசதிக்காவும் ஓவர் கோட் போட்டுத் தான் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனும் போது இங்கே பலியான பெண் ஓவர் கோட் அணிந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை.

ஒருவேளை அவர் ஓவர் கோட் போட்டு பணி செய்திருந்தால் அவரது துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை, அதனால் இந்த உயிரிழப்பும் தடுக்கப்பட்டிருக்கும் என்பதால் பணியாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டு, இந்த உயிரிழப்பு ஏற்பட அப்போது பணியில் இருந்த ஆவின் ஷிப்ட் அதிகாரியும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

எனவே இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்ற போது பணியாளர்களின் பாதுகாப்பு விசயத்தில் மெத்தனமாக இருந்த ஆவின் ஷிப்ட் அதிகாரி மற்றும் ஷிப்ட் அதிகாரிகளை கண்காணிக்க தவறிய பொதுமேலாளர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இந்த அசம்பாவித சம்பவம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இனி வருங்காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பணி செய்யும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், பால் பண்ணைக்குள் பணிக்கு செல்லும் பணியாளர்களுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கி, பால் பண்ணை நுழைவாயிலில் கருவிழி, முகம் மூலம் அடையாளப்படுத்தும் கருவிகள் மற்றும் பால் பண்ணை வளாகத்தின் உள்ளே, வெளியே சிசிடிவி காமிராக்கள் பொறுத்தி பணியாளர்களின் வருகை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சர்

ஆவின் பால் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமே நிரப்பப்படுவதால் ஒப்பந்த விதிமுறைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.  என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொண்ணுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள

 

இதையும் படிங்க.!