chennireporters.com

விபத்தில் சிக்கிய முதியவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வைத்த அமைச்சர் மா.சு.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் சென்று இருந்தார்.

அந்த பணி முடித்துவிட்டு பிறகு விமானம் மூலம் சென்னை திரும்பினார் விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் சுப்ரமணியசாமி கோயில் அருகில் பொது மக்கள் கூட்டமாக நின்று இருந்தனர்.

அப்போது காரிலிருந்து இறங்கிய அமைச்சர் கூடியிருந்த மக்களிடம் என்னவென்று விசாரித்தார்.

அப்போது பெண்மணி ஒருவர் முதியவர் ஒருவரை ஒரு வாகனம் இடித்துவிட்டு போனதில் அவர் காயமடைந்து விட்டதாகவும் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் இருப்பதாகச் சொன்னார்.

உடனடியாக தனது காரில் காயமடைந்த முதியவரை ஏற்றிக்கொண்டு அமைச்சர் வேகமாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் மருத்துவர்களை அழைத்து உடனடியாக முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்து முதியவரை காப்பாற்றும் படி உத்தரவிட்டார் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டிருந்தது.

காயமடைந்தவர் ஜாஃபர் கான்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து(72) என்பது தெரிய வந்தது இந்த செய்தி அந்தப் பகுதியில் காட்டுத் தீயாய் பரவியது.

அமைச்சர் மனிதாபிமானமூஅதுடன் விபத்தில் சிக்கிய வரை மருத்துவமனைக்கு தனது காரில் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடனேயே இருந்ததை பார்த்த பொதுமக்களும் மருத்துவர்களும்ஆச்சரியமடைந்தனர். அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க.!