#Election special story 2026.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது இந்த நிலையில் ஆவடி வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் அமைச்சர் நாசர் வெற்றி பிரகாசமாக தெரிகிறது.


அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வின் மற்றும் தவெக வேட்பாளர் தினத்தூது ராஜா என்கிற ரமேஷ்குமார் ஆகிய இருவரும் தொகுதிக்கு அதிகம் அறிமுகம் முகம் இல்லாதவர்கள். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி வேலை செய்யாதவர்கள்.
அமைச்சர் நாசர் ஏற்கனவே இதே தொகுதியில் நீண்ட காலம் அரசியல் செய்தவர் அரசியலில் அரிச்சுவடியில் இருந்து உயர்நிலை அரசியலை நன்கு அறிந்தவர்.
ஆவடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் நாசர்.
ஏற்கனவே கடந்த 2021 ஆம் தேர்தலில் 55 , 275 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அதேபோல தொகுதியில் தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து தருகிறார். தனது கட்சி தொண்டர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறார்.
ஆவடி தொகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் குடிநீர், சிமெண்ட் சாலை, தெரு விளக்கு வசதி போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அவரின் வெற்றி இப்போது பிரகாசமாக இருந்து வருகிறது.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் செய்து வரும் பிரச்சாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிர் கட்சிகள் திணறி வருகின்றனர். அதனால் மிக எளிதில் நாசர் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து உடன்பிறப்புகள் அமைச்சர் நாசர் மீண்டும் மகுடம் சூடி மந்திரியாக போகிறார் என்று உற்சாகத்துடன் பேசி வருகின்றனர். எனவே தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களாக இல்லாததால் நாசரின் வெற்றி பிரகாசமாக உதய சூரியனைப் போல பிரகாசிக்கிறது என்கின்றனர் ஆவடி தொகுதி திமுகவினர்.
#Advt News.
