ஆவடி ஆர்.ஆர் நிறுவனத்தின் உரிமையாளர் டி.எஸ். சதீஷ் பாபு அவர்களை வாழும் நல்ல உள்ளம் கொண்டவர் என்று தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் புகழாரம் சூட்டி வாழ்த்தி பேசினார்.ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட கிரைஸ் சொகுசு வணிக வளாகம் திறப்பு விழா நேற்று மாலை மார்ச்17ம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த திறப்பு விழாவை ரிப்பன் வெட்டி அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் . கிறிஸ்துவ பாதிரியார்கள் பலர் கலந்துகொண்டு ஜெபம் செய்து திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஆவடி ஜேக் ஜெயராமன், தொழிலதிபர்கள், அடையார் ஆனந்த பவன் நிர்வாகத்தின் உரிமையாளர் , திண்டுக்கல் தலப்பாகட்டி உரிமையாளர், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, ஆவடி மேயர் மற்றும் துணை மேயர், முன்னாள் காவல் உதவி ஆணையர் நந்தகுமார், உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அப்போது பேசிய அமைச்சர் நாசர் நண்பர் சதீஷ் அவர்களின் வீட்டில் தான் நான் பிறந்தேன். எனக்கு அவரது குடும்பம் மிக நெருங்கிய குடும்பம். அவரின் உழைப்பு அளப்பரியது. அவருடைய விடாத உழைப்பும், அவரது ஜெபமும், அவரை முன்னேற்றி வருகிறது. அவரிடம் எந்த நேரத்தில் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வார். அவர் ஆவடியில் வாழும் கொடை வள்ளல் என்றும் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
அவரின் மனைவி ஜெயந்தி அவர்களின் அளப்பரிய பங்கு இந்த பயணத்தில் சிறப்பாக அமைந்துள்ளது என்று பேசினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றினர். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அவர்களின் மனைவி லதா பாண்டியன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.
கிரைஸ் சொகுசு வணிக வளாகம் நான்கு தளங்களைக் கொண்டது. மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. நான்கு லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான இருக்கைகள் விளக்குகள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் கலந்துகொண்ட மதிமுக அந்திரிதாஸ் அவர்கள் தொழிலதிபர் சதீஷ் பாபு அவர்கள் மிகச் சிறந்த சுறுசுறுப்பாய் இயங்கும் இளைஞர். இன்னும் பல உயரங்களையும், 16 செல்வங்களையும் அவர் பெற்று நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி பேசினார். மிக சிறப்பாகவும், பிரமான்டமாகவும் நடைபெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டனர்.