chennireporters.com

முதலமைச்சர் ஆனார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்.

mks
மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் 16-வது முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இன்று முதலமைச்சராக கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.அவருடன் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்ற மு. க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.அதன் பிறகு அவருக்கு நன்றி கூறினார்.

அதன் பிறகு துரைமுருகன், பொன்முடி, கே. என். நேரு ,
ஐ. பெரியசாமி, ரகுபதி, போன்ற மூத்த கட்சி நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.அதன் பிறகு மற்றவர்கள் பதிவி ஏற்றுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் உடன் தமிழகஅமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

விழா முடிந்ததும் கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு        சென்ற ஸ்டாலின் அவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது ஸ்டாலின் கண்கலங்கினார்.

அதன் பிறகு தயாளு அம்மாவிடம் ஆசி பெற்றார்.அதனைத்தொடர்ந்து கலைஞரின் நினைவிடத்திலும் பெரியார் மற்றும் அண்ணாநினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க.!