பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மாமியார்-மருமகள் போட்டி.

September 22, 2021

By இரா. தேவேந்திரன்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராம். இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மாமியார் மருமகள் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார் அவரை எதிர்த்து அவரது ஜெயலட்சுமி என்பவரும் போட்டியிடுகிறார்.

மாமியார் ஜெயலட்சுமி

ஒரே நேரத்தில் ஜெயலட்சுமி மாமியார், சாவித்திரி மருமகள் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய பி.டி.ஓ. ஆபீஸ்க்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் கிராம மக்கள் சபாஷ் சரியான போட்டி என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

மருமகள் சாவித்திரி

தேர்தலுக்குப் பிறகுதான் வெற்றிக்கனியை பறிக்க போவது மாமியாரா மருமகளா என்பது தெரியவரும்.

Share:

இரா. தேவேந்திரன்.

September 22, 2021

Leave a Comment