chennireporters.com

மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தி.மு.க எம்.பி வில்சன் அவசர கடிதம்.

wilson-sir
தி.மு.க எம்.பி வில்சன்.

தமிழகத்திலுள்ள தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன னுக்கு தி.மு.க மாநிலங்களவை எம்.பி .பி.வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட் ஆய்வகம் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் எச்.எல்.எல் பயோடெக் குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆகிய மூன்று இடங்களிலும் அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான அமைப்பு வசதிகள் இருக்கின்றன.

அந்த ஆய்வகங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை துவங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கடந்த 2012ஆம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செங்கற்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளமானது இன்று வரை பயன்பாட்டுக்கு வராமலேயே இருக்கின்றன.408 பணியிடங்களில் 251 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் வளாகம் ஆனது இந்தியாவின் தொன்மையான தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று இந்த மையங்களை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஏற்கனவே 26. 04.2021 சென்னை உயர்நீதிமன்றத்திலும் 1,11 ஆகிய தேதிகளில் டிவிட்டர் தளம் வாயிலாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்

இந்த நிலையில் 10.5 2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தகைய தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கான போதிய வசதிகள் இந்த மையத்தில் இல்லை எனவும் அதே போல் இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து ஆலையை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

 இத்தகைய சூழ்நிலையில் இந்த மூன்று மையங்களையும் பயன்படுத்திட இரண்டு வழிகள் உள்ளன.முதலாவது ஏற்கனவே இந்தத் தடுப்பூசி மருந்துகளுக்கான காப்புரிமை பெற்று, தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இத்தகைய தடுப்பு மருந்து தயாரிப்பு மையங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி தடுப்பூசிகளை தயாரிக்கலாம்.

இரண்டாவதாக 1970ஆம் ஆண்டு பிரிவு 92 இந்திய காப்புரிமை சட்டத்தை பயன்படுத்தி இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதுள்ள பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த மருந்திற்கான காப்புரிமையை மத்திய அரசே வழங்க இந்த 3 மையங்களில் தடுப்பு மருந்து உற்பத்தி தொடங்க முடியும்.

எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த மூன்று இடங்களிலும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளின் உற்பத்தி துவங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய   அமைச்சர்ஹர்ஷவர்த்தன சுக்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க எம்.பி வில்சன் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க.!