காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் சிறப்பு நிலை செயல் அலுவலர் குணசேகரன் 30.6.2024 இன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவர் பணிபுரிந்த காலங்களில் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் விசாரணையும் நிலுவையில் உள்ளதால், தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பேரூராட்சிகளின் இயக்குநர் குணசேகரன்
இது சம்பந்தமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணிபுரிந்த காலங்களில், சமர்பித்த அறிக்கைகள் அறிக்கைகளில் 356 அறிக்கைகள் பத்திகள் நிலுவையில் உள்ளதாகவும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளது. மேலும் இவர் திருப்போரூர் பேரூராட்சியில் பணிபுரிந்த போது, ஒப்பந்ததாரர்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் சமீபத்தில் பணிபுரிந்த இடங்களில் மட்டுமே சுமார் 10 கோடிக்கும் மேலாக ஊழல் நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் செங்கல்பட்டு மண்டலம், உள்ளாட்சி நிதித் அறிக்கைகள் இணை இயக்குநர் அலுவலகத்திலும் செயல் அலுவலர் குணசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநர் திருமதி லாதா ஆகியோர் மீதுள்ள புகார்களின் விசாரணை நிலுவையில் உள்ளது. அதிகாரிகள் நேர்மையாக விசாரணை மேற்கொண்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.
Dr. M. Aarthi I.A.S,
தான் பணியாற்றிய இடங்களில் அதிகாரி என்ற திமிரில் லஞ்சம் கேட்டு மிரட்டுவது இவரது வாடிக்கை அது தவிர சில இடங்களில் அதாவது செல்வாக்கு மிக்க ஒப்பந்ததாரர்கள் அரசியல் செல்வாக்கு பின்புலத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்களிடத்தில் பிச்சைக்காரனை விட மிக மோசமாக கெஞ்சி தனக்கு வேண்டிய லஞ்சத்தை பெற்றுக் கொள்வாராம். எனக்கு மேலே உள்ள அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டி உள்ளது எனவே பார்த்து செய்யுங்கள் என்று ஒப்பந்ததாரர்களிடம் பாத்திரம் நீட்டி பிச்சை ஏந்தாத குறையாக தனது பங்கை கேட்டு பெறுவாராம்.