chennireporters.com

கேளம்பாக்கத்தில் இளம் பெண் கொலை. தொலைகாட்சி தொடர்கள் காரணமா?

கேளம்பாக்கத்தில் பெண் கழுத்து நெரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பர் காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்த பெண் ஷாயின்ஷா ( வயது-34) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.கணவர் வரதராஜ் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இந்நிலையில் தாயுடன் ஷாயின்ஷா தனது குழந்தை களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் இன்று அவரின் அம்மா வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது ஷாயின்ஷா இறந்து கிடந்தார்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடற்கூறு ஆய்விற்கு உடலை அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணையில் ஷாயின்ஷா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஷாயின்ஷா கள்ள காதல் தொடர்பாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஷாயின்ஷாவின் செல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவருடன் தொடர்பில் இருந்த பாலவாக்கதை சேர்ந்த கார்திக் என தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள இளைஞர் கார்த்திக்கை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக இது போன்ற முறையற்ற நட்புகளால் கொலை நடைபெற்று வருகிறது .இப்படி நடக்கும் கொலைகள் அனைத்திற்குமே தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களை பின்பற்றிய நடைபெறுகிறது.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் வரும் பாரதிகண்ணம்மா தொடரில் வரும் நாயகன் டாக்டர் பாரதி அவரை ஒருதலைபட்சமாக முறையற்ற உறவை ஞாயப்படுத்தும் வெண்பா கண்ணம்மாவை எப்படி எல்லாம் கொலை செய்யலாம் என்கிற திட்டம் வகுப்பது.

மேலும் பாரதியின் தம்பி மனைவி அஞ்சலியின் வயிற்றில் வளரும் குழந்தையை வில்லி வெண்பா எப்படி கலைப்பது என்று திட்டம் போடுவது என்று ஒரு பெண்ணை வில்லியாக காண்பித்து.

அந்த நாடகங்கள் சமூக வலைதளங்களில் குடும்பப் பெண்கள் அதிகம் பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக மனோதத்துவ நிபுணர்கள் பலர் தெரிவித்து வருகின்றன.

பல தொலைக்காட்சிகளில் வெளியாகும் மெகா தொடர்களில் இப்படி முறையற்ற நட்பு முறையற்ற காதலை மையப்படுத்தி காட்டுவது பெண்கள் மத்தியில் உளவியல் ரீதியான பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.

சமூகப் பொறுப்பை உணர்ந்து சமூகத்தில் முறையற்ற நட்பால் காதலால் கள்ள உறவுகளால் ஏற்படும் கொலைகளை தடுக்க தொலைக்காட்சி தொடர்கள் கவனத்துடன் தயாரித்து இயக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!