chennireporters.com

கலெக்டர் உத்தரவை மதிக்காத முருகன் கோயில் நிர்வாக அதிகாரி.

கொரோனா விதிகளை பின்பற்றாமல் திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர் சில முக்கிய விஐபி களை முருகன் கோயிலுக்குள் காவடி எடுத்துச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. பக்தர்கள் யாருக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணத்தால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் திருத்தணி கோயில் தக்கார் அதிமுகவை சார்ந்த ஜெய்சங்கர் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இவர் நேற்று சில முக்கிய விஐபி களை மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி மேளதாளத்துடன் காவடி எடுத்துச் சென்று தனியாக சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.

இவருக்கு கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து கோயில் நிர்வாக ஆணையர் பரஞ்சோதி இடம் கேட்டபோது தான் சில முக்கிய பணிகளில் இருப்பதாகவும் தங்களிடம் பத்து நிமிஷம் கழித்து பேசுகிறேன் என்று தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் பூபதி யிடம் கருத்து கேட்டபோது முருக பக்தர்களான நாங்களே அரசின் உத்தரவை மீறி கடவுளை தரிசிக்காமல் வீட்டிலேயே சாமி கும்பிட்டு வருகிறோம்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி அவர்கள் எப்படி சாமி தரிசனம் செய்தார்கள் அதற்கு அனுமதி அளித்தது யார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அது குறித்து அமைச்சரிடமும் கட்சித் தலைமையிடம் தகவல் தெரிவிப்பேன்அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

அது தவிர இந்து சமய அறநிலையத்துறை, துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் ஏற்கனவே தக்கார் ஜெய்சங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.

அர்ச்சகர்களும் கோயில் நிர்வாகிகளும் தன்னை மீறி எதுவும் செய்யக்கூடாது என்றும் அவர் வாய்மொழி சட்டங்களை போட்டு வைத்திருந்தார்.

அது தவிர கோவில் தெப்பத்திருவிழா, கற்பூர ஆரத்தி, சாமி தரிசனம், எதுவாக இருந்தாலும் தான் வந்த பிறகு தான் தொடங்க வேண்டும் என்று கோயிலின் பழக்க வழக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறி அவர் செயல்பட்டு வந்தார்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் கோயில் தக்காராக இருந்து வருவது திருத்தணியில் மட்டும் தான் உடனடியாக அவரை மாற்ற வேண்டும் என்று உடன்பிறப்புகளும் திமுக கூட்டணியை சேர்ந்த கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!