Chennai Reporters

புதிய இசை நிகழ்ச்சியில் களமிறங்கும் இசைஞானி.

இசை ஞானி இளையராஜாவை கொண்டாடாத மக்களே இல்லை. எவ்வளவோ சூப்பர் ஹிட் பாடல்கள் தந்தவர் ஆனால் இளையராஜாவின் பாடல்கள் எப்போதுமே காலத்தால் அழியாதவை.

இப்போது உள்ள இளைஞர்களுக்கும் அவரது பாடல்களுக்கு அடிமை. இன்றைய காலகட்டத்தில் அவர் அதிக படங்கள் இசையமைப்பது இல்லை.

மீண்டும் அவர் நிறைய பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பது தான் உலக ரசிகர்களின் ஆசை.

இந்த நிலையில் இசை ஞானி இளையராஜா குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி யுள்ளது.

அது என்னவென்றால் இளையராஜா ராஜபார்வை என்ற பெயரில் சன்தொலைக்காட்சியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறதாம். இப்போதைக்கு இந்த தகவல் தான் வெளியாகியுள்ளது.

மற்ற படி நிகழ்ச்சி குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது போன்ற எந்த தகவல்களும் இதுவரை சன்டிவி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இந்த நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்கிறார்கள் இசைத் துறையினர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!