chennireporters.com

#muthukon statue; அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்த தாமக.

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் அழகு முத்துக்கோன் அவர்களின் 267- வது குருபூஜை விழா காஞ்சிபுரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் கோகுலம் சத்திரம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாநில தலைவர் டாக்டர் நாசி ராமச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர், போஸ் மாநில பொருளாளர் எத்திராஜ் ஆகியோர் தலைமையில் மலையூர் வீ. புருஷோத்தமன் மாவட்ட தலைவர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பாபு நாயுடு, மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சங்கர், மாநகரத் தலைவர் சுகுமார் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து மதத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்து மதத்தைச் சேர்ந்த ரெவரெண்ட், தேவயிரக்கம் கிறிஸ்து நாதர் ஆலயம் அருட்பணி பேசில் காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை மோசஸ் ஏசுபாதம் லாரன்ஸ் சாலமன் பிரபாகரன் பிலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

alagumuthu kone Guru Pooja : காஞ்சிபுரத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267  வது குருபூஜை விழா!maveeran alagumuthu kone guru poojai vila || மாவீரன் அழகுமுத்துகோன்  குருபூஜை விழா || MAYON TV. - YouTube

மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், வழக்கறிஞர் பார் கவுன்சில் தலைவர் தம்பி அன்சாரி, ஆதில் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!