திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை கிராம பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வருபவர் ராஜசேகரன் (இவர் பட்டியல் இன சமூகம்) துணைத் தலைவராக இருப்பவர்.
உயர் சமுகத்தை சார்ந்த சுந்தர்ராஜன் மே 1ஆம் தேதியன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களும் பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் குடிதண்ணீர் பிரச்சனை சாலை வசதி தொகுப்பு வீடுகள் தொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது பேசிய பஞ்சாயத்து தலைவர் ராஜசேகரன் ஈக்காடு கண்டிகை கிராமத்தில் பஞ்சாயத்து நிதி முழுமையாக செலவு செயல்படாமல் அப்படியே இருக்கிறது.
துணைத்தலைவர் பொதுமக்கள் நலன் கருதி என்னுடன் இணைந்து செயல்பட மறுக்கிறார்.எனவே பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து நிர்வாகம் செய்து தர முடியவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது பொதுமக்கள் துணைத்தலைவர் சுந்தரராஜனிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பஞ்சாயத்து நிர்வாகம் சரியாக நடந்து வந்தது தற்போது உள்ள ராஜசேகரன் தான் கடந்த முறையும் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
அப்போது நிர்வாகம் சரியாக செயல்பட்டு வந்தது.நீங்கள் துணைத் தலைவரான பிறகு தான் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரே உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்.
ஏன் அப்படி நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்று பொதுமக்கள் துனை தலைவரை கேட்டபோது அவர் ஏதும் பதில் சொல்லாமல் உங்கள் கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
என்கிட்ட வராதீர்கள் என்னை தொட்டு பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.அது தவிர கிராம சபை கூட்டம் நடக்கும்போது பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தரையில் உட்கார்ந்து இருந்தனர்.
ஆனால் துணைத் தலைவர் சுந்தரராஜன் அந்த காம்பவுண்ட் சுவரில் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்துத் தலைவருடன் இணைந்து உட்காராமல் தனியாக ஒதுங்கி உட்கார்ந்திருந்தார்.
பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்த சுந்தர்ராஜன் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் நீங்கள் ஏன் தலைவருடன் ஒன்றாக உட்கார மாட்டீர்கள் என்று கேட்டார்
நான் கீழ் சாதியில் பிறந்தவர்களுடன் சமமாக உட்கார மாட்டேன் என்று தெலுங்கில் பேசி தனது மோட்டார் பைக்கில் வேகமாக சென்று விட்டார்.
பட்டியலின சமூகத்தை சார்ந்த பஞ்சாயத்துத் தலைவருடன் சமமாக உட்கார்ந்தால் கூட சாதி ஒட்டிக்கொள்கிறது என்று நினைக்கும் துணைத் தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்