chennireporters.com

#Nagai Inspector Periyasamy, who was fined for smuggling 400 kg of ganja; 400 கிலோ கஞ்சா கடத்தலுக்கு துனை போன நாகை இன்ஸ்பெக்டர் பெரியசாமி டிஸ்மிஸ் . டி.ஐ.ஜி, வருண் அதரடி .

திருச்சி: நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பிடிபட்ட வழக்கை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டரை டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

டிஸ்மிஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி.

திருச்சி மாவட்டம், கானக்கிளியநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியசாமி, 56. இவர், இதற்கு முன் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.

கடந்த 2022ல் நாகை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பெரியசாமி பணியாற்றியபோது, அங்கிருந்து இலங்கைக்கு கடல்வழியாக கடத்தவிருந்த, 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவின் தற்போதைய மார்கெட்டின் மதிப்பு சுமார் 40,00000 என்கின்றனர். போலீஸ் அதிகாரிகள்.

டிஐஜி வருண் குமார்.

இந்த வழக்கை பெரியசாமி முறையாக விசாரிக்கவில்லை. கஞ்சா வழக்கு குறித்து போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை, வழக்கின் குற்றவாளிகளுடன் விடுதியில் விருந்தில் பங்கேற்றுள்ளார்.

குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, அடுத்தடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.
இவர், பணியில் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி 13 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பிரச்னையில் சிக்கி வரும் இவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். 

டிஐஜி வருண் குமார்.

இன்ஸ்பெக்டர் பெரியசாமி சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்யாத பிராடுத்தனங்களே இல்லையாம். இவரின் சொத்து மதிப்பு மட்டும் பல கோடியை தாண்டும் என்கிறார்கள் இவருடன் பணியாற்றிய சில காக்கிகள்.

பெரியசாமிக்கு பெண்கள் என்றால் கொள்ளை பிரியமாம் அதிலும் கணவனுடன் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களை தன் வலையில் விழ வைப்பது, குடும்ப பிரச்சினை  என பெண்கள் வந்தால் அந்த குடும்பத்தை இவர் நடத்தும் அளவிற்கு அந்த விஷயத்தில் இவர் பெரிய ஹீரோவாம்.

டிஐஜி வருண் குமார்.

டிஐஜி வருண் குமார் அதிரடியாக பெரிய சாமியை டிஸ்மிஸ் செய்த பிறகு பல்வேறு புகார்கள் பெரியசாமி மீது வரத் தொடங்கியுள்ளன. அது மட்டுமல்ல சரி வர தன் பணிகளை  செய்யாத அதிகாரகள் இந்த உத்தரவை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

எனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பெரியசாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரின் சொத்துக்களையும் ஆய்வு செய்து அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர் சில உயர் போலிஸ் அதிகாரிகள்.

இதையும் படிங்க.!