Chennai Reporters

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா..

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் வி.ஐ.பி.க்கள் நிறைந்த பகுதியான போயஸ்கார்டன் ஏரியாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அமைதியான சூழல் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் குடியேர முடிவு செய்துள்ளனர்.

நயன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக இருப்பதால் திருமணம் முடிந்த உடன் போயஸ் கார்டனில் நடிகை நயன்தாரா குடியேர திட்டமிட்டுள்ளார்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிக்கொண்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளை வாங்க முன்பதிவு செய்து இருக்கிறார் நயன்தாரா.

ஒவ்வொரு வீடுகளும் 4 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள்.விரைவில் படப்பிடிப்புகள் முடிந்து திருமணம் நடந்து முடிந்ததும் போயஸ்கார்டனில் புதுப் பெண்ணாக குடியேறப் போகிறார் நயன்தாரா.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!