தங்கத்தில் மின்னும் பொற்சிலை அழகழகான உடையில் காட்சி தரும் நயன்தாரா வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாடா நிறுவனத்தின் நகை கடை (தனிஷ்க்) விளம்பர மாடலுக்காக எடுக்கப்பட்டிருக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது ரசிகர்கள் சிலர் நயன்தாராவுக்கு திருமணம் தயாராகி விட்டது என்று சொல்
கிறார்கள்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சினிமாவில் படு பிசியாக இருக்கும் முன்னணி நடிகை.
பல மொழி படங்களில் நயன்தாரா பிஸியாக இருந்தாலும் சில முன்னணி நிறுவனங்களின் நகைக்கடை விளம்பரங்களில் நடிக்க தவறுவதில்லை.
அப்படி தான் நயன்தாரா டாட்டா நிறுவனத்தின் தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்தில் அவர் நடித்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தற்போது அந்த நிறுவனத்தில் புதிய விளம்பரத்திற்காக கழுத்து நிறைய தங்க நகைகளுடன் மின்னும் தங்க சிலை போல மின்னுகிறார் நயன்தாரா.
அது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்பிளான சிவப்பு நிற பட்டுப்புடவையில் தலை நிறைய மல்லிகைப்பூடன் உச்சி முதல் பாதம் வரைக்கும் ஜொலி ஜொலிக்கும் நகைகள் அணிந்து தலை குனிந்தபடி அமர்ந்திருக்கும் நயன்தாராவின் இந்த சூப்பர் போட்டோஸ் லைக்குகளை அள்ளி குவித்து குவிக்கிறது.
அதே போல் பச்சை வண்ண கற்கள் பதித்த நகைகளை அணிந்து அழகு தேவதையாய் மிளிரும் நயன்தாராவின் புகைப்படமும் சூப்பராக இருக்கிறது.
ஜொலி ஜொலிக்கும் வைர நகைகளுடன் தேவதையாய் மின்னும் நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.