நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.. நயன் தன் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்.
அவரை கைவிட்டு விடாதீங்க என்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நயன் தாராவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக தமிழ் சினிமாவில் திடீரென ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவியது.
அதை அவர்கள் இருவருமே கண்டுகொள்ளவில்லை பிரேக்கப் செய்தி வெறும் வதந்தி ஆகவே இருக்க வேண்டுமென்று எண்ணினார்கள் நயன்தாராவின் ரசிகர்கள்.
இந்நிலையில் தான் நெற்றிக்கண் படம் பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டார் விக்னேஷ் சிவன்.
அதை பார்த்தவர்கள் நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருப்பதால் போஸ்ட் போட்டு இருக்கிறார்கள் என்று நினைத்தனர்.
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் கொச்சினுக்கு சென்று இருக்கிறார்கள் நயன்தாராவை கையை பிடித்து விமானத்திலிருந்து இறக்கி விட்டார் விக்னேஷ்.
சிவனும் நயனும் கை கோர்த்து நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த இன்ஸ்டாகிராமில் பார்த்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
பிரேக்கப் செய்தி பற்றி எதுவும் பேசாமல் செய்கை மூலம் விளக்கம் அளித்து விட்டார்
விக்னேஷ் சிவன் என்கிறார்கள் நயன்தாராவின் ரசிகர்கள்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர் படங்களில் பிசியாக இருக்கிறார்கள்.
இருப்பினும் நயன்தாராவை இந்த ஆண்டே மணப்பெண் கோலத்தில் பார்க்க ஆசைப்படு
கிறார்கள் நயன்தாராவின் ரசிகர்கள்.