chennireporters.com

நெல்லை அரசு பள்ளிக்கூட ஆயா அராஜகம். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்.

அரசு அங்கன்வாடி மற்றும் தொடக்க பள்ளி நிர்வாக சீர்கேட்டால் இங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் போதிய சத்துணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

நெல்லை டவுண் 52 வது வார்டு லாலுகாபுரம் பகுதியில் ரூபாய் 6 லட்சம் செலவில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.இதோடு அரசு தொடக்கப் பள்ளியும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

52வது வார்ட் அங்கன்வாடி

அங்கன்வாடி கட்டிட மையத்தில் மேலப்பாளையத்தை சேர்ந்த அலி பாத்திமா என்பவர் ஆயாவாக பணிசெய்து நிர்வகித்து வருகிறார்.விதவை வேலைவாய்ப்பு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்த இவர் தற்போது டீக்கடைக்காரர் ஒருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுடன் உள்ளார்.

தினமும் தனது 12வயது மகளுடன் காலதாமதமாக மையத்திற்கு வரும் இவர் அங்கு பயில வரும் 3 வயது முதல் 5 வயது வரையிலான சிறுவர்-சிறுமியர்களை அன்பால் பராமரிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்.

அவர்களுக்கு உணவு ஊட்டி விடுவது இல்லை, மலம் கழித்தால் பள்ளியில் படிக்கும் மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைக்கிறார்.குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களை மிரட்டி அவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு மாவு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை தராமல் விரட்டிய டிக்கிறார்.

தவிர, மையத்தில் உள்ள குழந்தைகளுக்கான கழிப்பறையில் குளித்தும் சமையலறையில் டீ போட்டு குடித்து பள்ளி வகுப்பறையில் தலைமுடியை விரித்து வைத்து கொண்டு ஜாலியாக உட்கார்ந்து ஊர் கதை பேசுவார்.

தலைமுடி உணவில் கலந்து சாப்பிட்ட சில குழந்தைகள் வயிற்றுப் போக்கால் பாதிப்ப
டைந்தனர்.எந்நேரமும் செல்போனை காதில் வைத்து மணிக்கணக்கில் பேசுகிறார்.உயர் அதிகாரியிடம் உடனுக்குடன் தகவல் பரிமாறுவதாக சொல்கிறார்.

மகளின் ஸ்கூல் பையில் சத்துமாவு, அவித்த முட்டைகள் மற்றும் தானிய வகைகளை மறைத்து வைத்து திருடி செல்கிறார்.

இவரின்இந்த அராஜகப் செயலால், தொடக்கத்தில் 25 குழந்தைகள் வரை இங்கு பயனடைந்து வந்த நிலையில் தற்போது 12 பேர் மட்டுமே அங்கன்வாடி மையத்திற்கு வருகின்றனர்.

அங்கன்வாடி ஆயா அலி பாத்திமா மகள் பாமிதா.

இவரின் இந்த அடாவடி நடவடிக்கை பற்றி உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்த போது அவர் கூறியதாவது ” எங்க அங்கன்வாடி பணி பிள்ளைகள் என்ன செய்வார்கள் சம்பளம் கம்மி, அரசு கொடுக்கும் அரிசி பருப்பு முட்டை அப்படியே திருடினால் தான் என்ன சாப்பிட்டுப் போகட்டுமே என்கிறார்.

அங்கன்வாடி மைய பாதுகாப்பு பொறுப்பு இந்த ஆயாவிடம் இருந்தும் இவர் தினமும் தாமதமாக வருவதால் அங்குள்ள துப்புரவு பணியாளரிடம் அங்கன்வாடி மைய சாவியை கொடுத்து காலையிலேயே கதவுகளை திறந்து வைத்து விடுகிறார்.

இதனால் அங்கு குழந்தைகள் பயன்படுத்தும் பொருள்கள் அரசு வழங்கும் தானியங்கள் பல காணாமல் போகிறது.இது தெரியாமல் இருக்க அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை முடக்கி வைத்திருக்கிறார்.

இவர் செய்யும் இந்த அராஜக அட்டூழியங்கள் அனைத்தும் அருகில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்.

காரணம் இவரின் தலைமையில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் வழங்கப்படும் முட்டைகள், சத்துணவு பொருள்கள் அனைத்தும் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படாமல் அபேஸ் செய்யப்படுகிறது.

இங்கு பணிபுரியும் சமையல் ஆயாக்கள் தாமதமாக வருவது மட்டுமல்லாமல் அதிகமாக முட்டைகளை வேண்டுமென்றே அவித்து மீதம் காட்டி கொண்டு செல்கின்றனர்.

இதில் தொடர்புள்ள பணியாளர்களை இவர் கண்டிப்பதில்லை.இது பற்றி அவர் கூறுகையில் ” நான் ஓய்வூதியம் பெறுவதற்கு இன்னும் சில வருடங்கள் தான் உள்ளது.

அவர்கள் நான் சொன்னால் கேட்க மாட்டார்கள்” என்றார்.வகுப்பறை மின்விசிறிகள் சரிவர இயங்குவதில்லை .ஒரு பழைய ஃபேனும் அபாயகரமான நிலையில் உள்ளது.

என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் இதற்கு இப்போ என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மிரட்டி “கொஞ்சம் விட்டால் வகுப்பறையில் ஏசி மாட்ட கேட்பீர்கள் போல தெரியுதே மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இதுபோல் புகார் அளித்த ஒரு மாணவனின் தாயை இனி நீங்கள் இங்கு வரக்கூடாது வந்தால் உங்கள் மகனுக்கு டி.சி கொடுத்து அனுப்பி விடுவேன் என கூறியதால் அந்த மாணவன் இப்போது பள்ளிக்கே செல்வதில்லை.

அதனால் இங்குள்ள மாணவர்களின் பெற்றோர்கள் இவரிடம் கேள்வி கேட்கவே அஞ்சுகின்றனர்.மேலும் பள்ளியில் வழங்கப்படும்.புதிய பாடப்புத்தகங்கள் காணாமல் போகின்றன. பாட வகுப்புக்களும் ஒழுங்காக ஆசிரியர்கள் எடுப்பதில்லை.

மூன்று வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த அராஜக அட்டூழிய நிர்வாகத்தை பள்ளி கல்வித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாத பட்சத்தில், தனியார் பள்ளிகளை விட்டு இங்கே படிக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிக்கே சென்று படிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழக அரசின் புதிய கல்வித் திட்டத்தில் படி, தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதி வாய்ப்புகள் அரசுப்பள்ளியில் செய்து மாணவர்களுக்கு தமிழ் வழிக் கல்வியை ஊக்கப் படுத்துவது ஓர் முக்கிய குறிக்கோளாகவும் இருந்து வருகிறது.

இதனை சீர்குலைக்கும் இந்த அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி நிர்வாகத்தை இனியும் விட்டு வைக்கலாமா என இங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் சாடி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறையின் உடனடி மற்றும் அதிரடி நடவடிக்கை மூலமே இதற்கு ஒரு விடிவு கிடைக்கும்.

இதையும் படிங்க.!