பத்திரிகைகள் தங்களது சுதந்திரத்தையும், தன்மானத்தையும் இழந்து பல ஆண்டுகளாகிறது. பொது நலனும் , சமூக அக்கரையும் இல்லாமல் சுயநலத்துடன் தங்கள் வருவாயை பெருக்கிக்கொள்ள பேக்கேஜ், விளம்பரம் என்னும் குறுக்கு வழியை கடைபிடிப்பது சமூதாயத்திற்கு பேராபத்தை விளைவிக்கும்.
என்றைக்கு பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவாக செய்து போடும் நிலைப்பாட்டை தமிழ் பத்திரிகைகள் கையிலெடுத்ததோ அன்றைக்கே உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. அவலங்களுக்கும் , உண்மைக்கும் குரல் கொடுக்காமல் விளம்பரம் என்னும் மாய வலையில் பத்திரிகை முதலாளிகள் விழுந்து விட்டது அவமானத்தின் உச்சமென்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
அண்ணாமலை குப்புசாமி.
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்க கோஷம் எழுப்பினார்கள். ஒரே நாளில் 10 லட்சம் பேர் அந்த கட்சியில் இணைந்ததாக செய்தி வெளியானது. இது குறித்து தமிழகத்தில் உள்ள நம்பர் ஒன் பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலர், இந்து தமிழ், தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் முதல் பக்கங்களிலும் எட்டுக்காலம் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். உடனடியாக அவரை பாஜக தலைமை தமிழக பாஜக மாநில தலைவராக நியமித்தது.
மலை மாடு அமர் பிரசாத் ரெட்டி.
கட்சியில் மாநில தலைவர் பதவிக்கு வந்ததும் அண்ணாமலையை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு ஊழல்களும் நடந்தேறின. மலை மாடு அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா, பெண்களின் ஆசை நாயகன் கிழடு கேசவ விநாயகம் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவாக செயல்பட்டனர். சிலர் பின்னாளில் கட்சியில் இருந்து விலகினார்கள். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அண்ணாமலை பத்திரிகையாளர்களை இழிவாகவும் திமுகவின் கைக்கூலிகள் என்றும் பேசி வந்தார்.
அரசியல் அறிவில்லாத அனுபவம் இல்லாத முட்டாள்தனமான வாதங்களை முன்வைத்து பத்திரிகையாளர்களை தரம் தாழ்த்தி அண்ணாமலை பேசி வந்தார். நூறு ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள், 200 ரூபாய் கூட தருகிறேன் திமுக என்ன தருகிறதோ அதைவிட அதிகமாக தருகிறேன் என்றெல்லாம் தரம் தாழ்ந்து பேசி வந்தார். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையை ரவுண்டு கட்டி அடிப்பேன் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அரசியல் தெரியவில்லை என்றால் பத்திரிகையாளர்களிடம் வந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. அது குறித்து அசிங்கப்பட்ட தற்குறி முட்டாள் அரசியல்வாதி அண்ணாமலை அந்த பத்திரிகையாளரை விமர்சித்து தனது வார்ரூமில் மீண்டும் கவர் வாங்குவது பற்றி இழிவாக பேசி இருந்தார். இதனால் அண்ணாமலைக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உள் துறை அமைச்சர் அமித்ஷா.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியை தழுவினார். இதனால் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். கட்சித் தலைமை தனக்கு எம்பி அல்லது கவர்னர் போன்ற புதிய பொறுப்புகளை வழங்கும் என காத்திருந்த அண்ணாமலைக்கு டெல்லி தலைமை பெரிய ஆப்பாக அடித்து ஓரங்கட்டி விட்டது.
பாஜக கேசவ விநாயகம்.
இதனால் விரத்தியடைந்த அண்ணாமலை தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் ஒரு பெரிய ஜோசியரை சந்தித்து அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசினார். அதில் அவருக்கு சாதகமான பதில் வந்ததால் உடனடியாக பாஜகவில் இருந்து விலகி உடனடியாக அரசியல் கட்சி தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அவர் அறிவித்தார். இதுகுறித்து தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐந்து முறை ஆட்சியைப் பிடித்த திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அண்ணாமலையின் அரசியல் பிரவேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அதேபோல அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவமும், தலைமை பண்பு இல்லாதவர் அரசியல் கட்சியை தொடங்கி அவரால் வெற்றி பெற முடியாது என்கின்றனர்.
அண்ணாமலையை தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் ஆர்வக்கோளாறால் அவமானப்பட போகும் அண்ணாமலை, முட்டு சந்தில் முட்டிக்கொண்டு தான் நிற்க வேண்டும் என்கின்றனர். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல விஜய் முதல்வர் ஆகிவிட்டதால் நாமும் முதல்வராகி விட முடியும் என்ற முட்டாள்தனமான முடிவெடுத்து பகல் கனவில் மிதக்கிறார் ஆட்டுக்குட்டி அண்ணாமலை.
திருச்சி சூர்யா.
பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தி அடிக்கடி பேசி வந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை இப்போது பத்திரிகை முதலாளிகளை கெஞ்சி கூத்தாடி தனக்கு ஆதரவாக செய்தி போடுமாறும் அதை பணம் கொடுத்து முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கெஞ்சி கூத்தாடினார் என்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களும் அரசின் முக்கிய உளவுப் பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் அண்ணாமலை தன்னுடைய வேதனையால் பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டுக்குட்டி அண்ணாமலை அரசியல் அனுபவம் பெற பால பாடம் கற்காமல் தமிழக அரசியல் குருகுல பாடம் படிக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். தமிழக மக்கள் ஆட்டுக்குட்டி அண்ணாமலையை தூக்கிக் கொண்டாடப் போகிறார்களா இல்லை அம்மனுக்கு நேர்ந்து விடப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.சி.பி.எம். சண்முகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் கடுமையாக விமர்சனத்த முன் வைத்துள்ளார். அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கி இருப்பதாக கூறிய நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தனது சமூக வலைதள பதிவில் பாஜக என்கிற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே பெயரை மாற்றி வியாபாரம் செய்கின்றனர். ஆர் எஸ் எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது.
அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான் வியாபாரத்தை வெற்றிகரமாக முடிக்குமா என்று மோடி அமித்தஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை. கட்சி ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பொய். இதில் பாஜக கட்சியினர் இணைக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. அண்ணாமலை போடுவது மாரீசமான் வேடம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு சண்முகம் தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார்.
