chennireporters.com

அமைச்சர் பெயர் சொல்லி கல்லா கட்டும் ஆவடி பெண் நகரமைப்பு அதிகாரி நிர்மலா தேவி.

                                                            ஸ்பெஷல் ஸ்டோரி

கோடிகளில் புரளும் ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு பெண் அதிகாரி பற்றித்தான் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

ஆவடி உள்ள லோக்கல் அமைச்சர் முதல் நகராட்சித்துறை அமைச்சர் வரை மாதாமாதம் கப்பம் கட்டவேண்டும் என கூறிக்கொண்டு கட்டிட அனுமதி வழங்க ஒரு கிச்சனுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை அருகே உள்ள ஆவடி 2019ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, பருத்திப்பட்டு, கோவில்பதாகை உள்ளிட்ட 9 கிராமங்களை உள்ளடக்கியது.

ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் காலிமனை வரன்முறை, கட்டிட அனுமதி, சப் டிவிஷன் அப்ரூவல் என மாதம் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படுகிறது.

9 கிராமங்களை உள்ளடக்கியதாலும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாலும் கட்டிட அனுமதி பிரிவுக்கு என நான்கு பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.

ஆனால் ஆவடி மாநகராட்சியில் ஒரே ஒரு பெண் அதிகாரி மட்டும் பில்டிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் கட்டிட அனுமதி வழங்க கிச்சன் அடிப்படையில் ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டு பெற்று வருகிறார்.

மேலும் காலி மனையை வரன் முறை செய்ய 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சன்மானமாக வாங்குகிறார்.

சப்டிவிசன் அப்ரூவல் வழங்க ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாயும் கராறாக லஞ்சமாக கேட்டு வாங்குகிறார்.இவர் கேட்கும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க மறுக்கும் பொதுமக்களிடம் தங்கள் மனுவில் நிறைய குறை இருப்பதாக கூறி அந்த மனுக்களை நிராகரித்து விடுவார் நிர்மலாதேவி.

கட்டிங் பணம் அதாவது கமிஷன் பணம் அதிகமாக இருக்கிறது என்று யாராவது கேட்டால்?இந்தத் தொகை எனக்கு அல்ல லோக்கல் அமைச்சர் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் நகராட்சி த்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு போய்விடுகிறது.

கே.என்.நேரு

திமுக பல வருஷமாக ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருந்தார்கள் அதனால் ரொம்ப ஓவரா ஆடுறாங்க நாம் என்ன செய்ய முடியும்.?என்று கேட்பாராம்.

ஆவடி மாநகராட்சியில் நான்கு பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் நான் மட்டும் வேலை செய்வதற்கு மாதா,மாதம் கப்பம் கட்டுவதாக நிர்மலா தேவி கூறி வருகிறார்.

அதிகாரிகள் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு இவர் மாதம் மாதம் லஞ்சப் பணம் கொடுப்பதாகவும் எல்லாரிடமும் சொல்லி வருகிறார். குறிப்பாக அத்திவரதர் புகழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி பொன்னையா லஞ்ச பணத்தை உரிமையாக கேட்டு வாங்குகிறார்.

என்று சொல்லும் T.P.I. நிர்மலா தேவி இவர் அமைச்சர்களுக்கு கப்பம் கட்டுவதினால் தான் அதாவது லஞ்சம் தருவதினால் தான் இவரை பணி இடமாற்றம் செய்யாமல் காலியாக உள்ள பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்தை நிரப்பாமலும் இருப்பதாக சொல்கிறார் நிர்மலா தேவி.

வீடு கட்ட வேண்டும் என வங்கியில் கடன் வாங்கி கட்டிட அனுமதி பெற வேண்டும் என்ற கணவுகளுடன் வரும் பொது மக்களின் ஆசையில் மண் அள்ளி போடும் நிர்மலா தேவி யை கறித்து கொட்டுகிறார்கள் கட்டிட அனுமதி கேட்டு வரும் பொதுமக்கள்.

இதற்கு முன் இங்கு பணியாற்றிய பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் அதிக அளவில் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னால் வந்திருக்கும்.

நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஐ.ஏ.எஸ்.

அதிகாரிகளும் லஞ்சம்’, லஞ்சம் என்ற பெயரில் பொதுமக்களின் ரத்தத்தை குடிக்கும் நிர்மலா தேவி போன்ற ஓநாய்களின் மீது அரசு அமைச்சர் நேரு,நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நடவடிக்கை எடுப்பார்களா?

இல்லை நிர்மலா தேவி சொல்வதைப்போல கண்டுக்காமல் போய் விடுவார்களா?ஆவடி மக்களுக்கு விடியல் அரசின் நீதி கிடைக்குமா என்பது தான் பல மில்லியன் டாலர் கேள்வி?

நான்கு பில்டிங் இன்ஸ்பெக்டர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் இவர் மட்டும் தான் T.P.I. ஆக பணியாற்றி வருகிறார். சி.எம்.ஏ பொன்னையனுக்கு ஐந்து லட்சம் தருவதாக சொல்லுகிறார்.

நாம் தமிழர் கட்சியினர் அமைச்சருக்கு எழுதிய புகார் கடிதம் கடிதம்

நிர்மலா நேரிடையாக பணம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக கிளார்க் பிரின்ஸ் தான் பணம் வாங்குவார். லைசன்ஸ் சர்வேயர் சரவணன், நரேந்திரன், இளமுருகன் ஆகியோர்கள் தான் நிர்மலாவு க்காக பணம் வாங்கும் ஏஜென்ட்டுகளாக வேலை செய்கிறார்கள்.

ஆவடியில் உள்ள சுமங்கலி நகை கடை அதிபர் இவருக்கு பெரிய நெருக்கமாக இருப்பதாக அதிபர் பரத் சொல்லுகிறார். அதே போல நிர்மலாவும் பரத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தினமும் மதியம் நிர்மலா ஓய்வெடுக்கிறாராம்.

இதையும் படிங்க.!