KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு KGF பி.ஜி.எம்மில் வந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை எப்போதும் ஓயாது. பத்திரிகைக்கு புதிய, புதிய செய்தி தரும் பெட்டகம், தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, ‘கைலாசா’ என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவும் அடிக்கடி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
ஆனால், இன்று வரை கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என்பதும், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருவதாக சொல்லி வருகின்றனர். நித்தியானந்தா மர்ம தேசத்தில் இருக்கிறார். அவர் ஒரு மர்மம்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நித்தியானந்தா இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்தத் தகவல் குறித்து நித்யானந்தாவின் சகோதரியின் மகன், ‘இந்து தர்மத்தை காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது” என்று இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கைலாசா வலைதள பக்கத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையை அடுத்து, தற்போது கே.ஜி.எஃப் பட பி.ஜி.எம்முடன் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ?’ என்ற கேப்ஷனுடன் நித்யானந்தா வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், அவர் உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் அத்தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அத்தீவை ஆட்சி செய்வதாக கூறிய நித்தியானந்தா, அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவில், ‘‘இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்’’ என கூறி உள்ளார். இதனால் நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், அவருடைய ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு யார் அதிபதி என்ற கேள்வியும் எழுந்தது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி உள்ள நித்தியானந்தா, போலி அடையாளங்களுடன் மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்காகவே அவர் இறந்துவிட்டதாக திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் செய்திகள் கூறப்பட்டது. இந்த நிலையில் கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உயிரோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற தெலுங்கு யுகாதி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்று உரையாற்றியதாக கூறப்பட்டுள்ளது.