திருவேற்காடு நகராட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கணேஷ் என்பவர் பற்றி பல்வேறு புகார்கள் நமது அலுவலகத்திற்கு வந்துள்ளது. அந்த புகார் குறித்து நாம் விரிவாக விசாரித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து ஒரு பெரிய புகார் கடிதம் நமது அலுவலகத்திற்கு வந்துள்ளது. அந்த புகாரில் கூறியுள்ள செய்திகளை நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் மற்றும் வாசகர்களுக்கு நாம் அப்படியே வழங்குகிறோம்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் வருவாய் பிரிவு அலுவலர் கணேசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக சித்ரா கமிஷனராக இருந்த பொழுது போலியாக அவர் கையெழுத்து போட்டு 20 லட்சம் ரூபாய் மோசடி செய்தார். மேலும் அதை கண்டுபிடித்த சித்ரா அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதன் பிறகு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த கணேசன் 2022, 2023 ஆம் ஆண்டுக்கான நகராட்சி துப்புரவு பணியில் பிளீச்சிங் பவுடர் மற்றும் உபகரணங்கள் வாங்கியதில் கணேசன் ஆல்பர்ட் மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து ஏழு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.எம், டி.எம்.ஏ. ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அது தவிர திருவேற்காடு நகராட்சியில் 9வது வார்டு, 15வது வார்டு, 7வது வார்டு, 5வது வார்டு ஆகிய வார்டுகள் கூடுதலாக கணேசன் வரிவசூல் செய்யும் பணியை செய்து வருகிறார்.
அந்த வார்டுகளில் பெரும்பாலும் கம்பெனிகள் குடோன்கள் மட்டுமே உள்ளன. அந்த நிறுவனங்களில் இவர் லஞ்சம் தரும் நிறுவனங்களில் குறைந்த அளவிற்கு வரியையும் லஞ்சம் தராத கம்பெனிகளுக்கு கூடுதலான வரியையும் வசூலித்து வருகிறார். இதில் மட்டும் கடந்த ஆண்டில் மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை இவர் சம்பாதித்துள்ளார். ஏறக்குறைய 14 ஆண்டுகளில் 20 கோடி ரூபாய் வரை இவர் சொத்து சேர்த்துள்ளார் மூன்று கார்கள் வைத்துள்ளார். திருவள்ளூர், பூங்கா நகர், ஜெயா நகர், ஆவடி ஆகிய பகுதிகளில் பல்வேறு வீட்டுமனைகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளையும் வாங்கி வைத்துள்ளார் திருவேற்காட்டில் தலித் சமூகத்தை சார்ந்த ஒரு பெண்ணை வப்பாட்டியாக வைத்துக் கொண்டு அந்த பெண்ணுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கிருக்கிறார் அந்த பெண் தற்போது அவரது குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார் இந்த பெண்ணுடன் தற்போது நட்பு பாராட்டி வரும் உமாநாத் என்பவரை கணேசன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
ஸ்டீபன்.
அது தவிர கணேசன் அவரது உறவினர்கள் ஆறு பேரை திருவேற்காடு நகராட்சியில் பணிக்கு வைத்துள்ளார். குறிப்பாக ராஜ்குமார் வருவாய் உதவியாளர் அவரது சித்தப்பா மகன் ரஞ்சித் குமார் இளநிலை உதவியாளர் இவரும் பெரியப்பா மகன் ராஜ்குமார் அலுவலக உதவியாளர் இவர் ஆணையர் தட்சிணாமூர்த்திக்கு உதவியாளராக இருந்து வருகிறார். கங்காதரன் அவரது மாமா துப்புரவு பணியாளர் நகர் மன்ற தலைவரு கிருஷ்ணமூர்த்திக்கு உதவியாளராக பணியாற்றி வருகிறார் வருவாய் ஆய்வாளர் நாகராஜ் அவரது சமூகத்தை சார்ந்தவர். ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றி வருவதால் அதிகாரிகள் செய்து வரும் ஊழல் மற்றும் அனைத்து பிராடுத்தனங்களையும் கணேசனுக்கு சொல்லிவிடுகின்றனர்.
அதனால் கணேசன் திருவேற்காடு நகராட்சியை தன் கையில் வைத்துக் கொண்டு அதிகாரிகளையும் மற்றும் ஊழியர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறார் என்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் 14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் எப்படி கணேசன் பணியாற்றி வருகிறார். அவருடைய பின்னணி என்ன அவர் சம்பாதித்துள்ள 100 கோடி ரூபாய் சொத்து குறித்து ஏன் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கணேசன்.
எனவே அவரைப் பற்றி உங்கள் இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தீர்கள் அதற்காக உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவர் குறித்து அனைத்து செய்திகளையும் உங்கள் இணையதளத்தில் வெளியிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அவரைப் பற்றி இன்னும் பல முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தருகிறோம். அதையும் நீங்கள் செய்தியாக வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு போலையா மற்றும் ரமேஷ் மற்றும் டெங்கு பணியாளர்கள் திருவேற்காடு நகராட்சி.
என்று அந்த புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நாம் சம்பந்தப்பட்ட ஊழியர் கணேசன் இடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் இந்த புகாரில் கூறி உள்ளதை போல் எதுவும் இல்லை. இந்த ஆபிசில் எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அந்த புகாரில் கூறியுள்ள செய்திகள் அனைத்தும் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
நாம் குறிக்கிட்டு 14 ஆண்டுகளாக எப்படி ஒரே இடத்தில் பணியாற்றுகிறீர்கள் அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்று கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். திருவேற்காடு நகராட்சியில் கமிஷனர் ஆக பணியாற்றிய சித்ராவின் கையொப்பம் போலியாக போட்டு பணம் கையாடல் செய்தது குறித்து அவர் ஏதும் பதில் அளிக்கவில்லை.
நாம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்த வகையில் நாம் ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் உண்மை என்றும் பல்வேறு ஆதாரங்கள் இருக்கிறது. ஜஹாங்கீர் பாஷா கமிஷனராக வந்தபோது அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. அதற்கு கணேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளார். என்பது குறித்தும் மேலும் பல ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். 14 ஆண்டுகளாக கணேசன் ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு நகராட்சி உயர் அதிகாரிகள் சிலருக்கு பலரும் லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தாக கூறப்படுகிறது.
அமைச்சர் நேரு.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறையில் 14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு அமைச்சர் நேரு, கணேசனுக்கு விருது தர இருப்பதாக சொல்லுகிறார்கள் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு ஐஏஎஸ் தனி அலுவலரை நியமித்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கணேசனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்.