chennireporters.com

#Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.

பட்டா வாங்க, நிலத்தை அளக்க, பட்டா பெயர் மாற்றம் செய்ய மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர், சர்வயேர், தாசில்தார் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும். என்ன தான் ஆன்லைனில் அப்ளை செய்தாலும், நிலத்தை அளக்க வரும் சர்வேயர் தொடங்கி, விஏஓ, தாசில்தார் ஆகியோரிடம் லஞ்சம் கொடுக்காமல் வாங்குவது எளிதானதாக இல்லை என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு |  Tiruvannamalai News A female sub-inspector who took a bribe of Rs.3  thousand is locked up in jail

இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். இன்றைக்கு அரசு அலுவலகங்களில் சேவைகளை பெறுவதற்கு கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருப்பதாக பலர் புலம்புகிறார்கள். எல்லா அரசு அலுவலகங்களில் இப்படியான நிலை என்றாலும், இதுபோன்ற சூழ்நிலை இருக்கிறது என்பதே பலரது குற்றச்சாட்டாக உள்ளது. அதேநேரம் சில நேரங்களில் பத்திரப்பதிவு செய்த உடன நிலத்தை அளக்க வரும் சர்வேயர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கேட்பதாகவும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

பணம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, நேரடியாக உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளியுங்கள். “நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள்.. பட்டா வாங்கியிருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ” நீங்கள் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயணம் தடவிய நோட்டுகளை உங்களுக்கு தருவார்கள். அதன்பின்னர் யார் உங்களிடம் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பாருங்கள். அவரிடம் லஞ்ச பணத்தை கொடுங்கள். அப்படி நீங்கள் பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். விஏஓ, சர்வேயர், தாசில்தார் ...பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாளைக்குள்ளாகவே இந்த தகவல் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்களும் உடனடியாக லஞ்சப் புகாரில் சிக்கிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்வார்கள்.பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டும். பொதுவாக கையும் களவுமாக சிக்கும் அரசு ஊழியர்கள், நீதிமன்றத்தில் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது. கண்டிப்பாக தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் தயவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளியுங்கள். ஒவ்வொருவரும் அலைய விடுகிறார்களே என்று நினைத்து கையூட்டு கொடுப்பதும், சிலர் 3 நாளில் முடிய வேண்டிய வேலையை உடனே முடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதும், இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் உடனே அரசு ஊழியர்கள் செய்து தர வேண்டும் என்று நினைத்து கையூட்டு கொடுப்பதும் லஞ்சம் ஒழியாமல் இருக்க முக்கிய காரணமாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!“கிராமங்களில் 2500 சதுர அடி மனைப்பரப்பிற்குள் வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி? தேனி கலெக்டர் விளக்கம் ” விதிகளை மீறுவதற்காகவே கையூட்டு கொடுப்போர், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக பொதுவெளியில் பேசுவதும் அதிகமாக நடக்கிறது. கையூட்டு கேட்பது எந்த அளவிற்கு தவறோ அதே போல் தான் கையூட்டு கொடுத்து விதிகளை மீறி காரியத்தை அரசு ஊழியர்கள் மூலம் காரியம் சாதிக்க நினைப்பதும் தவறாகும். நாம் விதிகளை மீறாமல் செயல்பட்டால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதுவரையில் லஞ்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. இதற்கு அரசு நினைத்தால் உடனே தீர்வுகளை உருவாக்க முடியும் என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

 

இதுபற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வழங்கியிருக்கிறார். மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற அவரது நோக்கம் வரவேற்கத்தக்கது. அதற்கான அவரது அணுகுமுறை தான் பயனளிக்காதது ஆகும். தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: யார் இந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்?தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம்,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘மனுக்கள் பெறப்பட்ட உடனோ, அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்; மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும்; கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப் பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

“நிலத்தை வைத்திருப்போர் அறிய வேண்டியது.. பட்டாவில் இத்தனை வகைகள் இருக்கா?  மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்புணர்வு பதிவு ; | Whatsapp Useful  Messages

இந்த சான்றுகளைப் பெறுவதற்கு கையூட்டு வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டு மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள நிலையில் தான் இந்த வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இதே போன்று வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பயனின்றி போய்விட்ட நிலையில், இந்த வழிகாட்டுதல்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பது தெரியவில்லை. மேலும், தமிழக அரசு நினைத்தால் ஒற்றைச் சட்டத்தின் மூலம் அனைத்து சேவைகளும் மக்களுக்கு குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பிராடு பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்  .. - chennireporters.com

ஆனால், அதை செய்யாமல் இத்தகைய வழிகாட்டுதல்களை வழங்குவது, கொக்கை நேரடியாக பிடிப்பதற்கு பதிலாக, அதன் தலையில் வெண்ணெய்யை வைத்து, அது உருகி வழிந்து, கொக்கின் கண்களை மறைக்கும் போது பிடிக்கலாம் என்று காத்திருப்பதற்கு ஒப்பானதாகும். இந்த அணுகுமுறை பயனற்றது; வெற்றி பெற வாய்ப்பில்லாதது. மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒற்றைச் சட்டம் என்பது பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தான். தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும்.

லஞ்சம் கொடுக்காத விழிப்புணர்வு வாரம்; ஊழலின் விளைவுகள் குறித்து போட்டி-  பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு அறிவுரை | no bribe awareness week -  hindutamil.in

அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். இதைச் செய்வதற்கு பதிலாக வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் இதை சாதிப்போம் என்று தமிழக அரசு நினைத்தால் இந்த முயற்சியில் அரசுக்கு படுதோல்வி தான் பரிசாகக் கிடைக்கும். இதற்கு சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகிறேன். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் , இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர், ”பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும்.

மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார். அதன்பின் 22 மாதங்களாகி விட்ட நிலையில், இன்று வரை முதலமைச்சரின் அறிவுறுத்தல்கள் செவிமடுக்கப்படவில்லை. இதே அறிவுறுத்தல்களை சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் பலமுறை வழங்கியுள்ளன. ஆனால், அவை விழலுக்கு இறைத்த நீரானதே தவிர பயனளிக்கவில்லை. தலைமைச் செயலாளரின் புதிய அறிவுறுத்தலுக்கும் அதே நிலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான், இந்த அணுகுமுறையை விடுத்து சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. இன்னும் கேட்டால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார். 

இதையும் படிங்க.!