ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமானதா ? இல்லை என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் கே. முருகன். ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரை வாசகர்களுக்காக அப்படியே அளிக்கிறோம்.
கே. முருகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசிய பொதுச் செயலாளர். பாண்டிச்சேரி.
இந்திய அரசியல் சட்டம் 15 ஆவது பகுதியில் பிரிவுகள் 324 முதல் 329 வரையில் நமது நாட்டின் தேர்தல் செயல்முறை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது சாட்சி படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் கருத்து, தேர்தல் முறையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முன்னிலை படுத்துகிறது.அரசியல் சட்டத்தின் முன்னுரையில் இந்தியா இறையாண்மை கொண்ட சோசலிச மதசார்பற்ற ஜனநாயக குடியரசு என்று தெளிவுபடுத்துகிறது.
மக்களவைத் தேர்தல் நேரடியாக மக்கள் வாக்களிப்பது மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மக்களவை
கலைக்கப்படாத நிலையில், அதன் முதல் கூட்டம் நடந்த நாள் முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்படும்.
மாநிலங்களவைத் தேர்தல் மறைமுக தேர்தல் முறையாகும் மாநில மக்கள் தொகை,சட்டசபைகளில் இருக்கின்ற இடங்களின் விகிதாச்சாரப்படியாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படு கின்றனர். அரசு சார்பில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேறினால்தான் அது சட்டமாகும்.
மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தில் சட்ட பேரவைத் தேர்தல் நடத்தப்படும் அரசியல் சட்டம் பிரிவு 324 ன் கீழ் ஒன்றிய அளவிலும், மாநிலங்களிலும் தேர்தல் சுதந்திரமாக அமைதியாக நடத்திட அரசியலமைப்பு கடமைகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்கின்றது.
கேசவானந்த பாரதி கேரள மாநில அரசு இடையேயான வழக்கில் (1973) உச்சநீதி மன்றம் ஜனநாயகம் என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் என்றும் இது ஒரு தொடர்ச்சியான பங்கேற்பு நட வடிக்கை என்று கூறியுள்ளளதோடு, ஜனநாயகம் நிலைத்திருக்க சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது சட்டப்பூர்வ உரிமை என்று கூறியுள்ளது.
பல மொழி, உரிமை, பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் திரு மோடி அவர்கள் தலைமையில் BJP அரசு 2014 ல் ஒன்றிய ஆட்சியில் அமைந்தது முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோயிந்த் தலைமையில் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் நிதி அயோக் தலைவர் N.K.சிங், முன்னாள் மக்களவை செயலாளர் சுபாஷ் C.காஷ்யப் முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அடங்கிய உயர்நிலைக்குழுவை அமைத்தது.இந்த குழு மார்ச் 2024 ல் அரசிடம் தங்கள் அறிக்கையை அளித்தது
செம்டம்பரில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்தது எதிர் வரும் குளிர்கால கூட்டத்தில் இது தொடர்பாக மசோதா கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய அளவில் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உயர்நிலை குழு தங்கள் அறிக்கையில், அரசு,வணிகம், நீதிமன்றங்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் மக்கள் என்று பல்வேறு தரப்பினர்களின் சிரமங்களை காரணம் சிக்கலை நிவர்த்தி செய்யவே ஒரே நேரத்தில் மக்களவை மாநில சட்ட சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடத்த கூறியுள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
உயர்நிலை குழு தங்கள் அறிக்கையில் இரண்டு விஷயங்களை கூறியுள்ளது. முதலாவதாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பரிந்துரைத்துள்ளது. இரண்டாவதாக, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுடன் ஒத்திசைக்க நடத்தவும் முன்மொழிந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் முதலாவது பரிந்துரை நூறு நாட்களில் நடத்தப்படுவதை உறுதி செய்துள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபை களின் ஒத்திசைக்க அரசியல் சட்டத்தில் 82 A பிரிவைச் சேர்க்க உயர்நிலை குழு பரிந்துரைத்துள்ளது.இந்த பிரிவு அமலுக்கு வந்தபிறகு(குறிப்பிட்ட தேதி) பொது தேர்தல்களில் அமைக்கப்படும் அனைத்து மாநில சட்ட சபைளும் மக்களவையின் முழு பதவி காலம் முடிவடைவதோடு முடிவடையும்.
எடுத்துக்காட்டாக, இந்த சட்டப்பிரிவு ஜூன் 2024 ல் அமலுக்கு வந்தால் இந்த அறிவிப்புக்கு பிறகு அமையும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் 2029 வரை மட்டுமே பதவி காலம் அவகாசம் இருக்கும். 2027 ல் மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால் பதவி காலம் 2029. மக்களவையுடன் முடிவடையும்.
செயல்முறையை எளிதாக்கும் வகையில் அமலாக்க குழுவும் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உயர்நிலை குழு பரிந்துரைத்துள்ளது
மேலும், சட்டப்பிரிவு 82 A(4) ன் படி, பொது தேர்தலின் போது எந்த ஒரு மாநில சட்டசபைக்கும் தேர்தலை நடத்த முடியாது தேர்தல் ஆணையம் கருத்து கூறினால் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்து வேறு ஒரு தேதியில் தேர்தல் நடத்த ப்படும்.பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சபை அல்லது இரண்டாம் ஆண்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்து ஆட்சி கவிழும் நிலையில், தேர்தல் நடத்தப்பபடலாம் அதன் பதவிக்காலம் முழு பதவிக்காலம் என்ற ஐந்தாண்டில் மீதமுள்ளதாக இருக்கும். இதற்காக, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 83 மற்றும் 172ல் திருத்தங்கள் செய்வதற்கு முன் மொழிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.உயர் நிலைக் குழுவின் பரிந்துரைகள் நமது நாட்டின் ஜனநாயத்திற்கு ஏற்புடையது இல்லை என்பது தெளிவாகின்றது.ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) பொது செயலாளர் து.ராஜா ஒரே நாடு ஒரே தேர்தல் நமது அரசியலைப்பு முறையில் நடைமுறைக்கு மாறானதும் நம்பத்தகாத யோசனை என்று கூறியுள்ளார். மேலும், இந்த கருத்தை CPI தொடர்ந்து எதிர்த்து வருகிறது.ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனைக்கு எதிராக முதலில் இந்திய சட்ட ஆணையத்தின் முன்பும் பின்னர் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோயிந்த் தலைமையிலான உயர்நிலை குழு முன்பாக கட்சியின் கருத்தை ஜனவரி 10,2024 அன்றும் விரிவாக தெரிவித்துள்ளோம். இந்தியாவின் அரசியமைப்பை உருவாக்கியவர்கள் பன்முகத் தன்மை குறித்து அறிந்ததோடு, கூட்டாட்சி அரசியலை கருதினர் தேர்தல் ஆணையத்தை நிரந்தர அமைப்பாக ஏற்படுத்தினர் ஒரே நாடு ஒரே தேர்தல் மாநில உரிமைகளை பறிப்பதாகும் என்ற வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திணிப்பை CPI எதிர்க்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.