உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது தொட்டபெட்டா சந்திப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 11 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் எடுத்துச் சென்றது தெரிய வந்ததை அடுத்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா.
இவர் ஏற்கனவே சென்னை மற்றும் திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றி இருக்கிறார். இவர் பணியாற்றிய எல்லா இடங்களிலும் லஞ்சத்தையே பிரதானமாகி பணியாற்றுவார். திருவேற்காட்டில் குருநாதன் என்பவர் இவரைப் பற்றி போஸ்டர் அடித்து திருவேற்காடு நகராட்சி முழுவதும் ஒட்டினார். செய்த பணிக்கு பணம் தராமல் 11 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டார் என்று அவர் போஸ்டர் அடித்து ஒட்டினார். அவர் ஜகாங்கீர் பாஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவும் இணையதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுக்க உள்ள நகராட்சிகளில் நகராட்சி ஆணையர் சுகாதார பிரிவு ஆய்வாளர் நகரமைப்பு பிரிவு வரி வசூலிப்பவர் அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களது சொத்துக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.