chennireporters.com

#ooty municipal commissioner; லஞ்ச ஒழிப்பில் சிக்கிய கமிஷனருக்கு பதவி வழங்கிய அமைச்சர் நேரு.

தீபாவளிக்கு முன் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி நகராட்சியின் கமிஷனர் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் புறப்பட்டபோது வழிமடக்கி சோதனை இட்ட ஊட்டி நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி, ஜஹாங்கீர் பாஷாவை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.  அப்போது பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

M K Stalin | Latest News on M K Stalin | Who is M K Stalin?அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் ஜஹாங்கீர் பாஷாவுக்கு உடனடியாக திருநெல்வேலி மாநகராட்சியில் பணி ஒதுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பல சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தியை நாம் தற்போது நமது வாசகர்களுக்கு அப்படியே அளிக்கிறோம்.

KN Nehru-led panel moots DMK rejig ahead of 2026 assembly pollsகடந்த பத்தாம் தேதி மதியம் சுமார் 2:30 மணிக்கு நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பரிமளா தேவி ஆகிய நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுது நீலகிரி மாவட்டம்,  உதகமண்டலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தனி வட்டாட்சியர் தேர்தல் பொறுப்பு மாவட்ட சிறப்பு ஆய்வு குழு அலுவலர் திரு கே சீனிவாசன் அவர்கள் நிலையம் ஆஜராகி கொடுத்த கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்ட புகார் இணை பெற்று நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண் 8/2024 கரப்சன் ஆக்ட் 1998 இன் படி வடக்கு பதிவு செய்தேன்.அந்த புகார் மனுவின் விபரம் பின்வருமாறு; 

கே சீனிவாசன் தனி வட்டாட்சியர் மாவட்ட சிறப்பு ஆய்வு குழு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீலகிரி மாவட்டம்.

பெருநர் காவல் ஆய்வாளர்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, நீலகிரி மாவட்டம்.

 

உதகமண்டலம் நகராட்சி அலுவலகத்தில் 9.11.2024 ஆம் தேதி ஏழே முக்கால் மணிக்கு (7 மணி 45 நிமிடம் )முதல் 10.11.2024 ஆம் தேதி ஒரு மணி வரை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் 9 11 2024 ஆம் தேதி சிறப்பு மாவட்ட ஆய்வு குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தனி வட்டாட்சியர் தேர்தல் கே சீனிவாசன் அவர்களுக்கு நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர்  ஜகாங்கீர் பாஷா அவர்கள் உதகமண்டல நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டிற்கு மாற்ற கட்டிட உரிமையாளர்களிடமிருந்தும் உதகமண்டலம் டு குன்னூர் சாலையில் அமைந்துள்ள சுவாதி டிரேடர்ஸ் சென்னை சில்க்ஸ் வணிக பயன்பாட்டிற்கு புதிய வரி நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் உதகமண்டலும் சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரையில் வாகனம் நிறுத்துவதற்கு ரவி பிரசாத் என்பவருக்கு உத்தரவு வழங்கியதற்காகவும், 9.11.2024ஆம் தேதி மாலை அலுவல் நேரத்திற்கு பின் தனியார் வாகனத்தில் சென்று கையூட்டு பெறப்போவதாக லஞ்சம் பெற போவதாக தகவல் கிடைக்கப்பெற்றது.மாநகராட்சியாகும் ஊட்டி; தயார் நிலையில் முன்மொழிவு; 510 உள்ளாட்சிகள் இணைப்பு!நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட சிறப்பு ஆய்வுக்கு வருவதாக நியமிக்கப்பட்ட நான் நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பரிமளா தேவி மற்றும் காவல் குழுவினருடன் உதகமண்டலம் டு கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பில் உதகமண்டலம் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் சென்ற டிஎன் 54 கே 69 ஜீரோ எட்டு என்ற தனியார் வாகனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த திடீர் ஆய்வின் போது நீலகிரி மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு அலுவலராகிய நான் மற்றும் நீலகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காயல் ஆய்வாளர் ஆகியோரால் தயார் செய்யப்பட்ட செயல்முறை நடவடிக்கையின் விவரம் பின்வருமாறு;

மேற்படி தகவலின் அடிப்படையில் நான் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் சங்கம் அனைவரும் இரண்டு வாகனங்களில் உதகமண்டலம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் மாலை சுமார் ஐந்து முப்பது மணிக்கு(5.45) சென்று உதகமண்டலம் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தபோது ஆணையர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் இரவு 7 மணிக்கு அரசு வாகன பதிவு எண் டிஎன் 43கே 21 97 கொண்ட வெள்ளை நிற scorpio வாகனத்தில் அலுவலகத்தை விட்டு சென்றார். அவரை பின் தொடர்ந்து நான் மற்றும் காவல் ஆய்வாளர் குழுவினருடன் சென்றபோது அவர் உதகமண்டலம் அரசு மருத்துவ கல்லூரி சாலை வழியாக முகமது சாலையில் உள்ள ஆணையாளர் குடியிருப்பிற்கு சுமார் 7.10 மணிக்கு சென்று தோல் பள்ளியுடன் வாகனத்திலிருந்து இறங்கிய பிறகு வாகனத்தை அனுப்பிவிட்டார்.

அப்போது அங்கு வந்த டிஎன் 54கே 69 ஜீரோ எட்டு(08) என்ற பதிவு எண் கொண்ட வித்யாஷ் காரில் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டதும் வாகனம் கமர்சியல் சாலை நோக்கி சென்றது. அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது அந்த வாகனம் உதகமண்டலம் கமர்சியல் சாலையில் அமைந்துள்ள சையது ரெஸ்டாரன்ட் குல் சென்று கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்த நபரை சந்தித்து பேசினார். பின்பு அந்த நபர் கேஷ் கவுண்டர் அருகில் இருந்த இரண்டு கவர்களை எடுத்து ஆணையாளரிடம் கொடுத்தார். அதை வாங்கி ஜகாங்கீர் பாஷா அவர்கள் தனது தோள் பையில் வைத்துக்கொண்டார். பின்னால் அவர் செல்போனில் பேசிக்கொண்டு அவர் வந்த காரின் அருகில் வந்த போது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர்களில் பின் அமர்ந்திருந்தவர் ஒரு இளம் பச்சை நிற அலுவலக கவரை எடுத்து ஆணையாளரிடம் கொடுத்தார்.

அதனை ஆணையளர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் வாங்கி தனது தோள்பையில் வைத்துக்கொண்டு காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தார். அப்போது மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் குழுவினருடன் அவரை நெருங்க முயன்ற போது டி என் 54 கே 69 ஜீரோ எட்டு என்ற கார் வேகமாக புறப்பட்டு பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக கோத்தகிரி நோக்கி சென்றது. அதை பின் தொடர்ந்து சென்ற போது மேல் கோடம் வந்து தாண்டி ஹைகில் டீக்கடை அருகில் அந்த வாகனம் நின்றது.. அப்போது கடை முன் காத்திருந்த ஒருவர் காரின் இடதுபுறப்பின் பக்கம் கதவின் அருகில் வந்து காக்கி நிற கவர் ஒன்று எடுத்து ஜகாங்கீர் பாஷா அவர்களிடம் கொடுத்தார்.

ஆணையாளர் அதை காரில் இருந்தவரை வாங்கிக் கொண்டார். அப்போது டிஎன் 54கே 69 ஜீரோ எட்டு என்ற வாகனத்தை சோதனை செய்வதற்காக நான் காவல் ஆய்வாளர் குழு இறங்க முயற்சித்த போது அந்த கார் புறப்பட்டு கோத்தகிரி சாலையில் வேகமாக சென்றது அதனால் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டி பின் தொடர்ந்து சென்று தொட்டபெட்டா சந்திப்பிற்கு முன் சுமார் 100 அடி தூரத்தில் அந்த வாகனத்தை முந்தி சென்று சைகைகாட்டி அந்த வாகனம் தொட்டபெட்டா சந்திப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. நான் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருடன் சென்று சுமார் 7.30 மணிக்கு அந்த வாகனத்திற்கு அருகில் சென்று காரின் பின் இருக்கையில் இருந்தவரிடமும், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அமர்ந்திருந்தவரிடமும், நான் என்னையும் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரின் அடையாள அட்டையை காண்பித்து அறிமுகம் செய்து கொண்டு வாகனத்தை தணிக்கை செய்ய விருப்பதாக நான் தெரிவித்தேன்.

காரில் பின் இருக்கையில் இருந்தவரிடமும் விசாரிக்க தனது பெயர் ஜகாங்கீர் பாஷா என்றும் தான் உதகமண்டலம் நகராட்சியில் 6.8.2024 முதல் நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வருவதாக சொன்னார். ஓட்டுனரிடம் விசாரிக்க அவர் தனது பெயர் ராஜா கௌடா என்றும் தான் ஊட்டியில் உள்ள முருகன் டிராவல்ஸ் ஓட்டுநராக இருந்து வேலை செய்து வருவதாக தெரிவித்தார் .பின்னர் நான் மற்றும் காவல் ஆய்வாளர் காரில் உள்ள லைட் மட்டும் எங்களுடைய அலைபேசியில் உள்ள டார்ச்சை ஆன் செய்து காரை சோதனை செய்தபோது பின் இருக்கையில் அமல் ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் அருகில் வைத்திருந்த ஐந்து அறைகள் கொண்ட ரோஷன் என்று எழுதப்பட்ட ப்ளூ மற்றும் இளம் காக்கி நிறத் தோல் பையை சோதனை செய்த போது அந்தப் பையில் இளம் பச்சை நிற அலுவலக கவர்களில் காகிட்டேப் போட்டியவாறு சுற்றி இருந்தது.

மேலும், அவர் அருகில் இருக்கையில் இருந்த சாம்பல் நிறத் துணி பையை சோதனை இட்டபோது அதிலும் இளம் பச்சை நிற அலுவலக கவர்கள் இருந்தது. மேலும் காரில் ஆணையாளர் அருகில் பரிசு பொருட்கள் இருந்தது. ஆணையாளர் அவர்களிடமும் விசாரிக்க மேற்படி அவர்களின் பணம் இருப்பதாக தெரிவித்தார். வாகனம் நிறுத்தப்பட்ட இடமானது கோத்தகிரி தொட்டபெட்டா மற்றும் ஈடுகட்டி செல்லும் சாலை சந்திப்பாகும்.

அந்த சந்திப்பில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததாலும் அங்கு கடும் குளிர் நிலவுவதாலும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் பாதுகாப்பு கருதி நகராட்சி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா மற்றும் வாகன ஓட்டுனர் ராஜா ஆகியோருடன் காரில் இருந்த ஆணையாளரின் உடைமைகளுடன் அந்த காரில் ஆணையாளரின் வலது புறமும் காவல் ஆய்வாளர் மற்றும் இடது புறம் நான் அமர்ந்து கொண்டு உதகமண்டல நகராட்சி அலுவலகத்திற்கு இரவு சுமார் 8.20 மணியளவில் அழைத்துச் சென்றோம். வாகனத்தை நிறுத்திவிட்டு நான் மற்றும் காவல் ஆய்வாளர் நகராட்சி ஆணையாளர் அவர்களை இறங்கச் சொல்லி அவர் வைத்திருந்த தோல்பை மற்றும் துணிப்பை பரிசு பொருட்கள் ஆகிய உடைமைகளை எடுத்துக்கொண்டு நகராட்சி ஆணையாளர் அறைக்கு வந்து அவரது இருக்கையில் அவரை அமர வைத்தோம். அவரது உடைமைகள் அனைத்தும் அவரது மேசையின் மீது காட்சிப்படுத்தப்பட்டது.

அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் வருவாய் ஆய்வாளர் காதர் பாட்சா தற்காலிக பணியாளர் மகேஷ் குமார், இளநிலை உதவியாளர் சரண் மற்றும் இரவு நேர காப்பாளர் ஸ்டீபன் ஆகியோர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு விவரம் தெரிவித்து விசாரணைக்காக காத்திருக்கும்படி அறிவுறுத்தினோம்.ஆணையாளர் அறையில் வைத்து செயல்முறை நடவடிக்கைகள் சுமார் 20.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஆணையாளர் திரு.ஜஹாங்கீர் பாஷா அவர்களை சோதனை செய்தபோது அவரது இடதுபுற பேண்ட் பாக்கெட்டில் ரூ.5,550/- இருந்ததை எடுத்து ஆஜர் செய்தார்.

அதைப் பற்றி அவரிடம் விசாரிக்க தனது செலவிற்கு வைத்துள்ளதாக தெரிவித்ததால், அந்த பணம் அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடந்து ஆணையாளரின் Roshan என்று எழுதப்பட்ட புளூ மற்றும் இளம் காக்கி நிற தோள் பையை சோதனையிடப்பட்டது. ஐந்து அறைகள் கொண்ட அந்த பையின் முதல் சிறிய அறையை திறந்து சோதனையிட்டதில் பொருள்கள் எதுவும் இல்லை. பின்னர் இரண்டாவது அறையை திறந்து சோதனையிட்டதில் காக்கி நிற டேப்பால் சுற்றப்பட்ட இரண்டு இளம் பச்சை நிற அலுவலக கவர்கள் இருந்தது. அதில் ஒரு கவரை பிரித்து சோதனை செய்தபோது 500 ரூபாய் தாள்கள் இரண்டு கட்டுகளாக மொத்தம் ரூ.1,00,000/- இருந்தது. மற்றொரு கவரை பிரித்து சோதனை செய்தபோது அதில் மூன்று கட்டுகளாக 500 ரூபாய் தாள்கள் மொத்தம் ரூ.1,29,000/- இருந்தது.

மேலும் அதே அறையில் இருந்த ரப்பர் பேண்டால் சுற்றப்பட்ட 40 எண்ணிக்கையில் 500 ரூபாய் தாள்கள் ரூபாய் 20000 இருந்தது ஆனையாளரிடம் விசாரிக்க உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டிலிருந்து வணிக பயன்பாட்டிற்கு வரி இனத்தை மாற்றிக்கொடுத்ததற்காக உரிமையாளர்கள் கொடுத்த பணம் என்று தெரிவித்ததால், அந்த பணம் மொத்தம் ரூ.2,49,000/- மற்றும் இரண்டு கவர்கள் செயல்முறை நடவடிக்கையில் விசாரணைக்காக கைப்பற்றபட்டது. பின்னர் அந்த பையின் மூன்றாவது அறையை சோதனை செய்தபோது அதனுள் கருப்பு நிற நெகிழி பை இருந்தது. அதில் கைப்பற்றும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. பின்னர் அந்த பையின் நான்காவது அறையை சோதனை செய்ய அதில் இளம் பச்சை நிற அலுவலக கவரினுள் நான்கு 500 ரூபாய் கட்டுகளாக மொத்தம் 2 லட்சம் இருந்தது.

ஆணையாளரிடம் அந்த பணத்தைப்பற்றி கேட்க தீபாவளிக்கு முன்பு சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை பார்க்கிங் டென்டர் விடப்பட்டதாகவும், டென்டர் எடுத்த திரு.ரவிபிரசாத் என்பவர் கொடுத்ததாக தெரிவித்தார். அந்த பணம் ரூ.2,00,000/- மற்றும் கவர் செயல்முறை நடவடிக்கையில் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டது. மேலும் சோதனை செய்ததில் அதே அறையில் 500 ரூபாய் தாள்கள் 5 கட்டுகளாக காக்கி நிற கவரில் சுற்றப்பட்டிருந்தது. அதில் மொத்தம் ரூ.2,50,000/- இருந்தது. அந்த பணத்தைப்பற்றி ஆணையாளர் அவர்களிடம் விளக்கம் கேட்க உதகமண்டலம் கமர்ஷியல் சாலையில் பாரதியார் வணிக வளாகம் கடை எண்.1 மற்றும் 2-ல் பாபு சுலைமான் பெயரில் உள்ள Limra Garments துணிக்கடையை ஹோட்டலாக மாற்ற விண்ணப்பிக்க இருப்பதாகவும், அதற்காக திரு.சாகுல் ஹமிது என்கின்ற சிராஜ் என்பவர் கொடுத்த பணம் என்று தெரிவித்தார்.

அந்த பணம் ரூ.2,50,000/- மற்றும் கவர் செயல்முறை நடவடிக்கையில் விசாரணைக்காக கைப்பற்றபட்டது. மேலும், ஐந்தாவது அறையை சோதனை செய்ய அதில் இருந்த apple நிறுவன IPad Pro மற்றும் YOUVA என்று குறிப்பிடப்பட்ட நோட்டு புத்தகத்தை விசாரணைக்குப்பிறகு திருப்பி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அவர் வைத்திருந்த BENCHMARK என்று பச்சை கலரில் எழுதப்பட்ட சாம்பல் நிற துணிப்பை சோதனையிட்டதில், இரண்டாக மடித்து காக்கி டேப் ஒட்டியவாறு சுற்றி வைக்கப்பட்டிருந்த A4 Size அளவுள்ள இளம் பச்சை நிற அலுவலக கவரில் 500 ரூபாய் தாள்கள் கொண்ட 10 கட்டுகளாக ரூ.4,71,000/-இருந்தது. அந்த பணத்தைபற்றி அவரிடம் விளக்கம் கேட்க உதகமண்டலம் to குன்னூர் சாலையில் அமைந்துள்ள சுவாதி டிரேடர்ஸ் (சென்னை சில்க்ஸ்) கட்டிடத்தின் பரப்பளவு மதிப்பீட்டை குறைத்து சொத்து வரி விதித்ததற்காக கொடுத்த பணம் என்று தெரிவித்தார். அந்த பணம் ரூ.4,71,000/- துணிப்பை மற்றும் கவர் விசாரணைக்காக செயல்முறை நடவடிக்கையில் கைப்பற்றபட்டது. மேலும் Roshan என்று எழுதப்பட்ட புளூ மற்றும் இளம் காக்கி நிற தோள் பை கைப்பற்றப்பட்டது.

மேலும் அவர் வைத்திருந்த பரிசு பொருட்கள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்கள் விசாரணைக்குப்பிறகு அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது. திடீர் சோதனையின்போது ஆணையாளர் திரு ஜஹாங்கீர் பாஷா அவர்களிடம் பணம் 11,70,000 கைப்பற்றப்பட்டதால் அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதற்காக ஆணையாளர் அறை முழுவதும் சோதனையிடப்பட்டது. கைப்பற்றும்படியான ஆவணங்களோ மற்றும் பொருளோ எதுவும் இல்லை.மேலும் வாகன எண்.TN 54K6908-ன் ஓட்டுநர் திரு.ராஜா கவுடா அவர்களை விசாரிக்க, அவர் மாலை சுமார் 19.10 மணியளவில் நகராட்சி ஆணையாளரை மேட்டுப்பாளையம் அழைத்து செல்வதற்காக அவரது குடியிருப்பிற்கு வந்ததாகவும், ஆணையாளர் தனது தோள் பையுடன் வந்து காரின் பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டதும், தான் புறப்பட்டு கமர்ஷியல் சாலை வழியாக வந்தபோது அங்கு பிக் ஷாப் கடை அருகே அமைந்துள்ள Syedi Restaurant அருகே காரை நிறுத்தச் சொன்னதன் பேரில் தானும் நிறுத்தியதாகவும், அப்போது அவர் தோள் பையுடன் இறங்கி Syedi Restaurant-க்குள் சென்று Cash Counter-ல் அமர்ந்திருந்த நபரை சந்தித்து பேசியதாகவும், அப்போது அந்த நபர் Cash counter அருகில் இருந்து கவர்களை எடுத்து ஆணையாளரிடம் கொடுத்ததார். அதைவாங்கி ஆணையாளர் அவர்கள் தனது தோள் பையில் வைத்துக்கொண்டதாகவும், பின்னர் அவர் செல்போனில் பேசிக்கொண்டே காரின் அருகில் வந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் இருந்த நபர் இறங்கி ஒரு இளம் பச்சைநிற அலுவலக கவரை எடுத்து ஆணையாளரிடம் கொடுத்தார்.

அதனை ஆணையாளர் அவர்கள் வாங்கி தனது தோள் பையில் வைத்துக்கொண்டு காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடன் பழைய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக கோத்தகிரி நோக்கி சேரிங்கிராஸ் அருகே சென்றபோது ஆணையாளர் யாரிடமோ செல்போனில் பேசி தான் வந்துகொண்டிருப்பதாகவும், High Hill Tea அருகில் நிற்குமாறு சொல்லிக்கொண்டு வந்ததாகவும், High Hill Tea அருகில் வந்தவுடன் ஒரு நபர் ஹில்டாப் எதிரே நின்றுக்கொண்டிருந்ததாகவும், ஆணையாளர் காரை நிறுத்தச் சொன்னதன் பேரில் தானும் நிறுத்தியதாகவும், அப்போது அந்த நபர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆணையாளர் அவர்களிடம் காக்கி நிற கவரை கொடுத்ததாகவும், அவரும் அதனை காரில் இருந்தவாறே வாங்கிக்கொண்டதாகவும், அந்த நபரும் ஆணையாளரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பியவுடன் தான் வாகனத்தை வேகமாக ஒட்டி சென்றதாகவும், சற்று நேரத்தில் தொட்டபெட்டா சந்திப்பில் காரை ஒட்டிக்கொண்டு சென்றபோது தாங்கள் காரை நிறுத்தச்செய்து காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆணையாளர் அவர்களிடம் திடீர் தணிக்கை செய்ய வந்திருப்பதாக தெரிவித்து அவரை விசாரித்து தன்னையும் விசாரித்ததாகவும் சொன்னார்.

விசாரணையின் போது ஆணையாளர் பணம் கொடுத்தவர்களின் விவரம் தெரிவித்ததன் பேரில் Syedi Restaurant உரிமையாளர்கள் S.சையது ரகுமான் மற்றும் S.சையது அப்துல் காலித் மற்றும் Limra Garments உரிமையாளர் சிராஜ் என்கிற சாகுல் ஹமீது ஆகியோர்கள் நகராட்சி அலுவலகம் வர தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் Syedi Restaurant உரிமையாளர்கள் சையது அப்துல் காலித், மற்றும் அவரது சகோதரர் திரு.சையது ரகுமான் இரவு சுமார் 21.00 மணிக்கு நகராட்சி ஆணையாளர் அலுவலகம் வந்து திடீர் ஆய்வு குழுவினரிடம் அறிமுகம் செய்து கொண்டனர். திரு. சையத் ரகுமான் அவர்களை விசாரித்த போது உதகமண்டலம் அஞ்சலாந்தரில் பெங்களூர் மெஸ் நடத்திவரும் தங்களது உறவினர் திரு.மொஹம்மது ரஃபி மூலம் நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் சுமார் ஒரு மாதமாக பழக்கம் என்று தெரிவித்தார்கள்.

ரூ.11 லட்ச லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி முன்னாள் நகராட்சி ஆணையருக்கு நெல்லையில் போஸ்டிங் - Former Ooty Municipal Commissioner caught with Rs. 11 lakh bribe gets posting in ...

மேலும் சையது அப்துல் காலித் என்பவரை விசாரிக்க 6 11/2024 ஆம் தேதி புதன்கிழமை ஆணையாளர் தன்னை என்னுடைய செல்போன் இருக்கு அவருடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு அவருடைய குடி இருப்பிற்கு வர சொன்னதாகவும் தான் செல்லாததால் மறுநாள் ஏழாம் தேதி தன்னை தொடர்பு கொண்டு வரச் சொன்னதின் பேரில் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது அவர் வீட்டில் இருந்து பணக்கற்றை அடங்கிய இரண்டு இளம் பச்சை நிற அலுவலக கவரை கொடுத்து வைத்திருக்க சொல்லி தான் ஊருக்கு செல்லும்போது அதை வந்து வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார் என்றும் மேலும் தான் அதை வாங்கி ரெஸ்டாரண்டில் வைத்திருந்ததாகவும், அதை ஆணையாளர் கடைக்கு வந்து வாங்கி சென்றதாக தெரிவித்தார்.

பின்னர் தகவலின் பெயரில் சுமார் 8.10 மணிக்கு சாகுல் ஹமீது என்கிற சிராஜ் நகராட்சி அலுவலகம் வந்து திடீர் ஆய்வு குழுவினரிடம் அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் விசாரிக்க உதகமண்டலம் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் ஏற்கனவே உதகமண்டலம் நகராட்சி அலுவலகத்தில் 2018 ஆம் வருடம் நகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளராக இருந்தபோது தனக்குத் தெரியும் என்றும் தற்போது அவர் நகராட்சி ஆணையாளராக வந்த பிறகு அடிக்கடி சந்திப்பது வழக்கம் என்றும் தான் நடத்திவரும் லிம்ரா கவர்மெண்ட் துணிக்கடையை ஹோட்டலாக மாற்ற ஏற்பாடு செய்ய நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா அவர்களை கடந்த ஒரு மாத காலமாக கேட்டுக் கொண்டிருப்பதாக அது தொடர்பான நடவடிக்கைகள் அவரே மேற்கொண்டு உதவி செய்வதாகவும் தானும் அது சம்பந்தமாக அடிக்கடி அவரது தொலைபேசி எண்ணுக்கு தான் பேசியதாக தெரிவித்தார்.

பல லட்சம் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியது எப்படி? அரசு அதிரடி முடிவு | Ooty Municipal Commissioner Jahangir Pasha transferred to waiting list ...

அதேபோல ஒன்பதாம் தேதி தன்னை தொடர்பு கொண்ட கமிஷனர் தனது துணிக்கடையை ஓட்டலாக மாற்ற ஏற்பாடு செய்து தருவதாகவும் வருவாய் அலுவலர் சந்தித்து வருகின்ற திங்கட்கிழமை அன்று மனு அளிக்குமாறு தெரிவித்தார் என்றும் மேலும் அவர் இன்று சென்னைக்கு செல்வதாக கூறி துணிக்கடை ஓட்டலாக மாற்ற இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தன்னிடம் வந்து கொடுக்குமாறு தெரிவித்ததாகவும், பின்னர் சுமார் 7.15 மணிக்கு ஆணையாளர் அவர்களை தான் தொடர்பு கொண்டு எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று கேட்டதற்கு கோத்தகிரி சாலையில் உள்ள ஐகில் டீ என்ற இடத்திற்கு பணம் 2 லட்சத்து 50 ஆயிரத்து எடுத்துக் கொண்டு வரச் சொன்னதாகவும், அதன் பெயரில் தானும் அவர் கேட்ட பணம் 2,50,000 ஒரு காக்கி நிற கவரில் வைத்து கையில் டி என்ற இடத்தில் காத்திருந்ததாகவும், அப்போது சுமார் ஏழு முப்பத்தைந்து மணிக்கு ஆணையாளர் காரில் வந்து நிறுத்தியதாகவும் தானும் அவரை சந்தித்த தன்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன்.

பின்னர் அலுவலகத்தில் இருந்த வருவாய் பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சரண்குமார் என்பவரிடம் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளராக பணியில் சேர்ந்தது முதல் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து  வரி இனத்திலிருந்து வணிக பயன்பாட்டு  வரி இனத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட கட்டிடங்கள் விவரங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு இனமாக வரி விதிப்பு செய்த விவரங்கள் குறித்து கேட்க அவர் வருவாய் பிரிவு ஏற்று இருக்கையில் இருந்த கணினியில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்த வணிக பயன்பாடாக மாற்றி அமைத்த 52 கட்டிடங்களின் விவரங்களை எடுத்து எங்களுக்கு அளித்தார்.

ரூ.11 லட்ச லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி முன்னாள் நகராட்சி ஆணையருக்கு நெல்லையில் போஸ்டிங் - Former Ooty Municipal Commissioner caught with Rs. 11 lakh bribe gets posting in ...

அதில் ஒவ்வொரு பக்கத்திலும் ஆணையாளர் நான் மற்றும் காவல் ஆய்வாளர் சான்றொப்பம் செய்து செயல்முறை நடவடிக்கை கைப்பற்றினோம். மேலும் அவரிடம் வணிக பயன்பாட்டில் வரிவிதிப்பு செய்த விவரங்கள் குறித்து கேட்க 41 கட்டிடங்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஆஜர் செய்தார். அதில் ஒவ்வொரு பக்கத்திலும் ஆணையாளர் நான் மற்றும் காவல் ஆய்வாளர் கையொப்பம் செய்து செயல்முறை நடவடிக்கையில் கைப்பற்றினோம். மேலும் அவரிடம் சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகனம் நிறுத்துவதற்கு ஏலத்தில் விடப்பட்ட விவரங்கள் குறித்த கோப்பினை கேட்க சரண்குமார் தன்னுடைய இருக்கையில் இருந்து மேற்படி கோப்பினை எடுத்து வந்து ஆஜர் செய்தார்.

(பக்கம் ஒன்று முதல் 48 வரை )அதில் ஒவ்வொரு பக்கத்திலும் ஆணையாளர், நான் மற்றும் காவல் ஆய்வாளர் சான்றொப்பம் செய்து செயல்முறை நடவடிக்கையில் கைப்பற்றினோம். பின்னர் அவரிடம் சுவாதி டிரேடர்ஸ் (சென்னை சில்க்ஸ்) குறித்த கோப்பினை கேட்க, அவர் 33-வது வார்டை சேர்ந்த வருவாய் உதவியாளர் திரு.ஸ்டேன்லி பாஸ்கர் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேற்படி கோப்பானது நகராட்சி ஆணையாளரின் வரவேற்பு அறையின் மேசையில் இருப்பதாக தெரிவித்ததாக கூறி. அந்த கோப்பினை எடுத்து ஆஜர் செய்தார் (பக்கம் 1 முதல் 80 வரை) அதில் ஒவ்வொரு பக்கத்திலும் ஆணையாளர், நான் மற்றும் காவல் ஆய்வாளர் சான்றொப்பம் செய்து செயல்முறை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டது.

மேலும் திரு.சையது அப்துல் காலித் அவர்கள் பயன்படுத்திய நீல நிற Redme Note12 Pro 5G செல்போனில் 9600526603 எண்ணிற்கு ஆணையாளர் திரு.ஐஹாங்கீர் பாஷா அவர்களின் செல்போன் 9444224393 எண்ணிலிருந்து வந்த அழைப்புகளின் விவரங்களை Screenshot எடுத்து பிரிண்ட் அவுட் எடுத்து ஆணையாளர், நான் மற்றும் காவல் ஆய்வாளர் ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் செய்து வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றினோம். A.ஜஹாங்கீர் பாஷா, சையது ரகுமான், சையது அப்துல் காலித், ராஜ கவுடா மற்றும் சாகுல் ஹமிது என்கின்ற சிராஜ் ஆகியோர்களை நான் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தேன். திடீர் ஆய்வானது 09.11.2024-ம் தேதி 19.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 10.11.2024-ம் தேதி 13.00 மணிக்கு முடிக்கப்பட்டது.

A.ஜஹாங்கீர் பாஷா

திடீர் ஆய்வின்போது தயார் செய்த செயல்முறை நடவடிக்கைகள், கைப்பற்றப்பட்ட பணம் ரூ.11,70,000/- மற்றும் ஆவணங்கள், A.ஜஹாங்கீர் பாஷா, சையது ரகுமான், சையது அப்துல் காலித், ராஜவ கவுடா மற்றும் சாகுல் ஹமிது என்கின்ற சிராஜ் ஆகியோர்களின் வாக்குமூலங்களை இத்துடன் இணைத்துள்ளேன். உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நகராட்சி சம்மந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ள உரிமையாளர்களிடமிருந்து பணம் ரூ.11,70,000/- பெற்ற நகராட்சி ஆணையாளர் திரு.A.ஜஹாங்கீர் பாஷா அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

ஒப்பம். K.சீனிவாசன், உதகமண்டலம், 10.11.2024. Submitted: I have received the complaint on 10.11.2024 at about 14.30 hrs from Tr.K.Srinivasan, Special Tahsildar (Elections), District Special Inspection Cell Officer, District Collectorate, Udhagamandalam and registered a case in Nilgiris Vigilance and Anti-Corruption Cr.No.8/2024 u/s. 7 of the Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amendment) Act, 2018 at about 15.00 hrs Q P.Parimaladevi 10.11.2024 Inspector of Police, Vigilance and Anti- Corruption, The Nilgiris. முதல் தகவல் அறிக்கையின் அசல், அசல் புகார், அசல் செயல்முறை நடவடிக்கைகள் மற்றும் படிவம் 91 மூலமாக கைப்பற்றப்பட்ட பணம் ரூ.11,70,500/- ஆகியவற்றை கனம் தலைமை நீதித்துறை நடுவர், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உதகமண்டலம் அவர்களுக்கு அனுப்பி வைத்தும் இதர நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.

இவ்வாறு ஜகாங்கீர் பாஷா மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக அவருக்கு திருநெல்வேலியில் பணி அமர்த்தப்பட்டதில் அதிகாரிகளுக்கு ஜஹாங்கீர் பாஷா லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவரது துறை சார்ந்த அதிகாரிகளே புகார் சொல்லுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கி நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்ட ஜகாங்கீர் பாஷாவுக்கு எப்படி அதிகாரிகள் பணியை ஒதுக்கி உடனடியாக அவருக்கு உத்தரவு போட்டார்கள். இந்த செய்தி அமைச்சருக்கு கூட தெரியாதா? என கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.

இதையும் படிங்க.!