chennireporters.com

செக்மோசடி வழக்கில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் டி.ஐ.ஜி உத்தரவு.

சப்-இன்ஸ்பெக்டர் முருகன்.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சப்இன்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முருகன்.

இவர் மீது கடந்த மாதம் 22.09.2021 ம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளர் அமித்குமார் என்பவர் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் செக் மோசடி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆறாவது எதிரியாக சேர்க்கப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேற்படி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மருத்துவ விடுப்பில் இருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.

கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி.

இச்செயலுக்காக கோவை மாவட்ட சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அவர்களின் ஆணையின் படி சப் இன்ஸ் பெக்டர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தி தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!