chennireporters.com

ஆவடி பத்திர பதிவு அலுவலகத்தில் கொரோணா கட்டுப்பாடு இல்லாமல் நிரம்பி வழியும் கூட்டம்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆவடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சந்தைக்கடை போல கூட்டநெரிசலில் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகம் சிக்கித் தவித்து வருகிறது.

இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் முழுவதும் இயங்கி வரும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களின் நிலைமை இது தான்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் முகக்கவசம் அணிவது அல்லது சேனிடைசர் வழங்குவது போன்ற எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் எரிகிற வீட்டில் பிடுங்கிற வரைக்கும் லாபம் என்று அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

பத்திர பதிவு அதிகாரிகளும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்.பத்திர பதிவுத்துறை தலைவர் மற்றும் அரசு ஒரு வழிகாட்டுதலை உருவாக்கி அதை பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல் படுத்தவேண்டும்.

நோய்த்தொற்றும் பரவும் அபாயத்தை தடுக்கும் விதமாக மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!