திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்டி கூட்ட அரங்கில் பிடிஓவை ஒருமையில் பேசிய திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் வை. ஜெயக்குமார் இவர் நேற்று அதாவது10.1.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பஞ்சாயத்து வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டத்தில் பள்ளிப்பட்டு பிடிஒ அற்புதராஜ் என்பவரை ’வாடா, போடா’ என்று ஒருமையில் அதிகாரிகள் மத்தியில் அவரை தரைக்குறைவாக நடத்தினார் என்று கூறப்படுகிறது.

அப்போது குறிக்கிட்ட பிடிஒ அற்புதராஜ் வயதில் மூத்தவர் என்பதாலும் சீனியர் என்ற மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசக்கூடாது என்று கண்டனம் தெரிவித்தார். ஆனால் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் வெளியே போடா நாயே என்று மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை வெளியேற்றினார். இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் நாம் பேசினோம் . அதில் ஜெயக்குமாரின் லீலைகள் பற்றி அடுக்கடுக்காக புகார் வாசிக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்.

திட்ட இயக்குனர் ஜெயக்குமார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 28 பிடிஒக்கள் உள்ளனர். மாதம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 2லட்சம் ரூபாய் ஜெயக்குமாருக்கு கப்பம் கட்ட வேண்டும். வருமானம் அதிகம் உள்ள பிடிஒக்கள் மூன்று லட்சம் வரை தர வேண்டும். தனக்கு கப்பம் கட்டாதவர்கள் மீது ஏதாவது ஒரு குறையை சுட்டிக்காட்டி உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கைகளை ஜெயக்குமார் எடுப்பார்.
குறிப்பாக இவர் ஒரு சமூகத்தை சார்ந்த அதிகாரிகளையே திட்டியும் அவர்களை பணியிட மாற்றம், பதவி நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை என எல்லா தண்டனைகளையும் வழங்குகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக மாதம் ஒன்றிற்கு பிடி ஜெயக்குமார் 20 லட்சம் வரை கல்லா கட்டி வருகிறார் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்கள் அதிகாரிகள். இவருக்கு லஞ்சம் வாங்கி தருவதற்காகவே நிர்வாகப் பொறியாளர் ராஜவேலை தன் அலுவலகத்தில் வைத்திருக்கிறார். அவர் மூலம்தான் ஜெயகுமார் லஞ்சம் வாங்குவார்.
ஒப்பந்ததாரர்களின் வைப்புத் தொகையை திரும்பத் தருவதற்கு 4 சதவீதம் லஞ்சம் வாங்குகிறார். அதே போல சிஎஸ்ஆர் ஃபண்டு ரிலீஸ் செய்வதற்கும் லஞ்சம் வாங்குகிறார். இவர் ஐஏஎஸ் அதிகாரியைப் போல நான்கு பிசிகளை வைத்திருக்கிறார். இந்த நான்கு பேரும் ஒ.பி. அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஒ.டி.யாக வேலை செய்து வருகிறார்கள்.
அதில் குறிப்பாக பாலாஜி தான் இவரின் முக்கிய வலதுகரமாக செயல்பட்டு லஞ்சமாக கொடுக்கப்படும் அனைத்து பணங்களையும் சேகரித்து திட்ட இயக்குனர் ஜெயக்குமாருக்கு தருவார். அது தான் அவரின் பிரதான வேலை.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்
ஜெயக்குமார் எந்த மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் ஆகி சென்றாலும் தனது உதவியாளராக பாலாஜியையும் அழைத்துச் செல்வார் என்கிறார்கள். டி.ஆர்.டி.யில் உள்ள ஒரு பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டருடன் திட்ட இயக்குனர் ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம் அவரைக்கண்டாலே ஆயிரம் வாட்ஸ் பல்புபோல ஆகிடுவாராம் ஜெயகுமார்.
தனக்கு எந்த பதவி வேண்டும் எந்த பகுதியில் வேலை வேண்டும் என்றால் அந்த பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம் கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேற்றித் தருவாராம் திட்ட இயக்குனர் ஜெயக்குமார்.
ஜெயக்குமாரின் லீலைகளை சொல்லி மாளாது என்கிறார்கள். அவர் டிஆர்டி யில் வளம் வரும் ஒரு காதல் மன்னன் அஜித் குமார் என்கிறார்கள் அதிகாரிகள்.

தன்னுடன் பணியாற்றும் சக அதிகாரிகளை தரை குறைவாக பேசாமல் கண்ணியத்துடன் நடத்தினால் துறை சார்ந்த வேலைகள் சுமுகமாக செய்ய முடியும். ஆனால் தனக்கு கப்பம் கட்ட வில்லை என்ற காரணத்திற்காகவும் ஒரு சமூகத்தை சார்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளை ஒருமையில் பேசுவதும் அவர்கள் மீது வன்ம நோக்கத்தோடு தரைகுறைவாக பேசுவதையும் தனது தொழிலாகவே வைத்திருக்கிறார் ஜெயக்குமார் என்கிறார்கள்.
எனவே மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஜெயக்குமாரை கண்டித்து வைப்பது மட்டுமில்லாமல் நேர்மையான திறமையான அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள். டி ஆர் டி மீட்டிங் நடக்கும்போது லஞ்சம் தர வந்திருக்கும் ஒப்பந்ததாரர்களிடம் தனது புரோக்கர்களை அனுப்பி லஞ்சம் வாங்குவதில் மிகப்பெரிய கில்லாடி பி டி ஜெயக்குமார் என்கின்றனர் அதிகாரிகள்.
திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நான் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். ஜெயகுமார் மீது உள்ள குற்றசாட்டுகளை 100 பாகங்களாக எழுதலாம் என்கின்றனர். அவ்வளவு செய்தி கொட்டி கிடக்கிறது என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்.
