chennireporters.com

#officials and begs அதிகாரிகளை மிரட்டி பிச்சை எடுக்கும் கலெக்டரின் பி.ஏ செல்வமதி.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தினமும் மாலை நேரம் ஆனவுடன் சற்று தெளிவான மனநிலையில் இல்லாதவரைப் போல நடந்து கொள்ளும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வ மதி பற்றி பல்வேறு புகார்கள் சொல்லுகிறார்கள் வருவாய் துறை அதிகாரிகள்.

கலெக்டர் பி.ஏ. செல்வமதி.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருச்சியில் இருந்து மாற்றலாகி திருவள்ளூர் மாவட்டத்திற்கு கலெக்டரின் பர்சனல் அசிஸ்டன்டாக வந்தவர் (டெபுடி கலெக்டர்) செல்வமதி. திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உயர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார்.Collector Tiruvallur (@TiruvallurCollr) / X

கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வமதி பற்றி பல்வேறு புகார்களை சொல்லுகிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள். அதிகாரிகளை மிரட்டி கௌரவ பிச்சை எடுக்கிறார் பணம் தராத அதாவது தான் கேட்கும் லஞ்சப் பணத்தை தராத தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மீது டிஆர்ஓ ராஜ்குமாரிடம் போட்டுக் கொடுப்பது இவரது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் போட்டுக் கொடுப்பதில் டாக்டர் பட்டம் வாங்கியவர் தான் திருச்சி செல்வ மதி என்கின்றனர். அதிகாரிக்கு லாயக்கு இல்லாத செல்வமதி தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை பொது இடங்களில் தரை குறைவாக பேசி வருகிறார்.

கலெக்டர் பி.ஏ. செல்வமதி.

அலுவலக நேரம் முடிந்த பிறகு ஒவ்வொரு அதிகாரிகளையும் மீட்டிங் என்று வரவைத்து ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அனைவரும் முன்னிலையிலும் ஒருமையில் பேசுவது அநாகரிகமாக பேசுவது என எல்லா விதமான அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் மாலை 5 மணி ஆனதும் தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு டிஆர்ஓ அறைக்கு சென்று 9 மணி வரை எல்லாரைப் பற்றியும் போட்டுக் கொடுத்து டிஆர்ஓ குட் புக்கில் இடம்பெற்று வருகிறார் செல்வமதி. ஒரு பெண் ஆய்வாளரை ஒருமையில் பேசி மிரட்டியதால் அலுவலகத்திலேயே அந்த பெண் மயக்கம் போட்டு விழுந்து தற்போது மெடிக்கல் லீவில் சென்று விட்டார். என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்.

வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களுக்கு மாதம் கடைசி தேதியில் கப்பம் கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு தாசில்தார்களையும் மிரட்டி லஞ்சம் கேட்பதாகவே வெளிப்படையாக பேசுகின்றனர். அதிகாரிகள் நேர்மையுடன் துடிப்பு மிக்க இளைஞராக பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தெளிவான மனநிலையில் இல்லாத அனைவரையும் போட்டுக் கொடுக்கும் புகழ்பெற்ற செல்வமதியை கண்டிக்க வேண்டும் என்கின்றனர் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் .பணிக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே ஏகப்பட்ட புகார்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

செல்வ மதி கலெக்டரின் பர்சனல் வேலைகள் அனைத்தும் நான் தான் பார்த்து வருகிறேன் என்று கலெக்டரின் பெயரில் பல முக்கிய வேலைகளையும் செய்து கல்லா கட்டி வருவதாக சொல்கிறார்கள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள். கலெக்டர் பிரபுசங்கர் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் பணியாற்றி வரும் சூழலில் மேலும் தன் பெயருக்கு பெரும் கலங்கத்தை விளைவித்து வரும் தனி அலுவலர் செல்வமதியை கண்டிக்க வேண்டும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கத்தினர்.

இந்த செய்தி குறித்து செல்வமதி தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!