சென்னை பல்லாவரம் இன்ஸ்பெக்டர் சுமதி பேசியதாக ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதன் உண்மைத்தன்மை என்னவென்று இதுவரை தெரியவில்லை.. அதேசமயம், இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மீண்டும் உங்களை ஏமாற்றி விட்டோம்.
நடிகை மகாலட்சுமி திடீர் பதிவு பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் தமிழக பதிவுத்துறை முன்னெடுத்து வருகிறது. சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்.. சரியான நேரத்தில் கை கொடுப்பாரா எலான் மஸ்க்?
காத்திருக்கும் ட்விஸ்ட் “பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில்.. திறந்தவெளி காரில் காதல் ஜோடி செய்த வேலை.. இளைஞர் கைது ” ஆனாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி, ஆங்காங்கே கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.
நீளும் புகார்கள்: லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும்கூட, பெண் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. பத்திரப்பதிவு துறையை தாண்டி, காவல்துறையிலும் இந்த லஞ்சப்புகார்கள் பெருகி வருகின்றன..
4 நாட்களுக்கு முன்புகூட மதுரையில் பெண் போலீஸ் எஸ்.ஐ. கீதா என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.. திருமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், தன்னுடைய திருமணத்திற்கு பெற்றோர் தந்த 95 பவுன் நகைகளை, கணவரிடமிருந்து வாங்கி தருமாறு மனைவி கேட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் சுமதி
“முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கே போன திவ்யா.. பல்லாவரம் இன்ஸ்பெக்டர் சுமதிக்கு இது தேவையா? பரபர சென்னை” இன்ஸ்பெக்டர்: கணவனும் 95 சவரன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஒப்படைத்து விட்டார்.
ஆனால், இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு நகைகளை பார்த்ததுமே, தன்னிடமே வைத்துக் கொள்ள சபலம் துளிர்த்துள்ளது. மொத்த நகையையும் தன்னிடமே வைத்துக் கொண்டதுடன், சொந்த தேவைக்காக, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து ரூ.43 லட்சம் பணத்தையும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.. இப்போது கீதாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அதுபோலவே சென்னையில் இன்னொரு பெண் போலீஸ் மீது குற்றச்சாட்டு செய்துள்ளது.. பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யாவுக்கு 28 வயதாகிறது.. பி.இ. பட்டதாரியான இவர், ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
பல்லாவரம் திவ்யா: கடந்த 2022ல், பல்லாவரத்தில் உள்ள ஜிம்மில் சேர்ந்துள்ளார் திவ்யா. அப்போது, மணிபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அதுவே காதலாக மாறியிருக்கிறது. 2 பேருமே இரண்டரை வருடங்களாக பழகி வந்தனர். அப்போது மணிபாலன் சிறிதுசிறிதாக திவ்யாவிடமிருந்து ரூ.19 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. “சென்னை பல்லாவரத்தில் வீடு வாங்க போறீங்களா.. கவனம் மக்களே.. ஹைகோர்டில் அரசு அளித்த உறுதியை பாருங்க ” இதற்கு நடுவில் திவ்யா கர்ப்பமாகிவிடவும், ஆசை வார்த்தை கூறி மாத்திரை மூலம் கருவை கலைத்திருக்கிறார் மணிபாலன்.
இதற்கு பிறகு திவ்யாவிடம் மணிபாலன் பேசுவதையே தவிர்த்துவிட்டாராம்.. இதுகுறித்து திவ்யா கேட்டதற்கு, நாம் இருவரும் வேறு வேறு ஜாதி என்று காரணம் சொல்லியிருக்கிறார். இதற்குபிறகே, தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று உணர்ந்த திவ்யா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பம்மல், சங்கர் நகர் போலீசில் புகார் தந்துள்ளார்.. நியாயம் வேண்டும்: பலவகைகளில் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதால், தனக்கு நியாயம் வேண்டும் என்று கண்ணீர் மல்க போலீசில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, தேவையான நடவடிக்கை எடுக்காமல், லஞ்சம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.. இதுவரை ரூ.70 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளில் திவ்யாவிடமிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மனம் உடைந்துபோன திவ்யா, தனக்குரிய நியாயம் வேண்டும் என்று கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்.. இதைத்தவிர, முதல்வரின் தனிப் பிரிவுக்கும் சென்று புகார் அளித்தார்.. தனிப்பிரிவு: திடீரென கோர்ட்டுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் திவ்யா சென்று புகார் அளித்ததை கண்டு, இன்ஸ்பெக்டர் சுமதி அதிர்ச்சி அடைந்தார்..
உடனே இதுகுறித்து திவ்யாவுக்கு போனை கேட்டு கேட்டுள்ளார்.. அதற்கு திவ்யா, லஞ்ச பணம் எல்லாம் தந்தும்கூட, நீங்கள் நடவடிக்கை எடுக்காததால்தான், கோர்ட்டுக்கும், முதல்வர் அலுவலகமும் சென்றதாக பதிலளித்தார். இந்த ஆடியோ பேச்சுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதேபோல இன்னொரு ஆடியோவும் வெளியாகியிருக்கிறது..
அதில் இன்ஸ்பெக்டர் சுமதி, “இதுவரை உன்கிட்ட நான் வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுகிறேன்.. தயவு செய்து இந்த விஷயத்தை இதுக்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கெஞ்சுகிறார்.. இந்த 2 ஆடியோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோ நிஜமா? பொய்யா? எனினும் இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை. சுமதி நிஜமாகவே பணம் பெற்றாரா? அல்லது வேண்டுமென்றே திட்டமிட்ட ஒன்றா? என்றும் தெரியவில்லை. எனவே, இது குறித்து போலீசார்தான் உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும். என்கின்றனர்.
தமிழக போலிஸ் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் போலிசாருக்கு காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் கனிவுடனும் மரியாதையாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். லஞ்சம் புகார் தொடர்பாக போலிசார் மீது புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே கூறியிருந்த்து குறிப்பிடதக்கது.