தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் தரப்பில் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் 8 லட்சத்து 37ஆயிரத்து 317 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக மொத்தம் 3119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த தேர்வினை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.
கிருமிநாசினி கொண்டு தேர்வு அறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு நடை பெறும் மையங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை.அதற்கு தடை விதிக்கப்படுகிறது பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த வாழ்த்து செய்தியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நம்பிக்கையோடு எதிர்கொண்டு தேர்வில் வெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் செருப்பு அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.