திருவள்ளூரில்வக்கீல்களுக்கும் காக்கிகளுக்கு உச்ச கட்ட பணிப்போர் நடந்து வருகிறது.
திருவள்ளூர் அருகே உள்ளது.B-8 புல்லரம்பாக்கம் காவல் நிலையம்.இந்த காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றுக்காக யோகானந்தம் என்பவர் காவல் நிலையம் சென்று அங்கு பணியில் இருந்த எஸ்.எஸ். ஐ. மீசை சுப்பிரமணியம் லஞ்சம் வாங்குவதில் சிறந்து விளங்கும் எஸ்.எஸ்.ஐ.
அதேபோல பிரச்சனைகளுக்கும் அதிகம் பஞ்சமில்லாதவர்.பல சர்ச்சைக்கு உள்ளான இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இவர்.ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது*.
அது தவிர புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி கடந்த 2 மாதத்திற்கு முன்பு கூட ஒரு கொலை நடந்தது.அது தவிர அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை நடந்துள்ளது.
சென்னையில் உள்ள பழைய குற்றவாளிகள் பல பேர் இந்த கிராமத்தில் இந்த புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்..
இந்த நிலையில் வழக்கு ஒன்றுக்காக காவல் நிலையத்திற்குச் சென்ற வழக்கறிஞர் யோகானந்தம் என்பவரை அவ மரியாதையுடன் பேசி அவரை மிரட்டி கைது செய்து விடுவதாகவும் உன்னை லாக்கப்பில் தள்ளி விடுவேன் என்றும் மீசை எஸ்.எஸ்.ஐ. லஞ்சம் புகழ் சுப்பிரமணியம் மிரட்டி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் யோகானந்தம் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் மூன்று நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமாரிடம் பேசி பிரச்சனையை பெரிது படுத்தாமல் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுப்பதாக வழக்கறிஞரிடம் கூறப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பூண்டி கிராமத்தை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வழக்கறிஞரை மிரட்டி உள்ளார் எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியம்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் விமல்ராஜ் என்பவரை மிரட்டி அவரது சட்டையைப் பிடித்து அவர் வைத்திருந்த செல்போனையும் பைக் சாவியையும் பிடுங்கிக் கொண்டார்.
அப்போது லஞ்சம் கொடுக்க வந்த ஒரு ரெகுலர் பார்ட்டி எஸ்.எஸ்.ஐ சுப்பிரமணியத்திடம் இருந்து சாவியை வாங்கி வழக்கறிஞர் விமல்ராஜிடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். https://tinyurl.com/y9x9y7vd
இதுகுறித்து விமல்ராஜிடம் நாம் பேசியபோது நான் உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணி மீது வழக்குத் தொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மாவட்ட குற்றப்பிரிவுக்கு ஒரு வழக்கிற்காக விசாரிக்கச் சென்ற அருணகிரி என்ற வழக்கறிஞரை போலீசார் அவரை அவமரியாதையுடன் பேசி அவரை மிரட்டியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக மாவட்ட தலைநகரமான திருவள்ளூரில் கருப்பு சட்டைக்கும் காக்கி சட்டைக்கும் மோதல் உருவாகியுள்ளது.
இதுவரை லஞ்சம் வாங்கி சேர்த்த சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியின் சொத்து மதிப்பு சில கோடிகளை தாண்டும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.இவரது மகன் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறாராம்.
அது தவிர சில உயர் போலீஸ் அதிகாரிகள் இவருக்கு பக்கபலமாக இருப்பதாக சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள்.சுப்பிரமணி மீது மாவட்ட நீதிபதியும், மாவட்ட எஸ்.பி.யும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
எஸ்.எஸ்.ஐ. மீசை சுப்பிரமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் அவர் மீது தனி வழக்காக (PRIVATE CASE ) ஆக வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கிறார். நேர்மையுடன் பல வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர் ரமேஷ்பாபு.