chennireporters.com

48 யூட்டியூப் சேனல்கள் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு போலீஸ் அதிரடி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார் .

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேஜர் ஆகாத எந்த ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் முகத்தையோ உண்மையான பெயரையோ பதிவு செய்யவோ அல்லது ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தகவல் ஒளிபரப்புத்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

அது தவிர உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.மேலும் சம்பந்தப்பட்டவர்களின் முகங்களையும் சமூகவலைதளத்தில் அல்லது தொலைக்காட்சியிலோ காட்டக்கூடாது.

மிதுன் சக்கரவர்த்தி

இந்நிலையில் திடீரென்று ஊருக்கு நூறு முறையற்ற அங்கீகாரம் இல்லாத யூடியூப் சேனல்கள் நியூஸ் வெப்சைட்டுகள் முறைப்படி தொடங்கப்படாமல் டுபாக்கூராக செயல்பட்டு வருகிறது.

உள்ளூரில் நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை படம் பிடித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.இந்த நிலையி தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

கோவை மாணவி தொடர்பான செய்தியையும் அவர் தொடர்பான அடையாளத்தையும் 48 யூடியூப் சேனல்கள் வெளியிட்டுள்ளன. அதனடிப்படையில் மேற்படி 48 யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு இந்த டுபாக்கூர் யூடியூப் மற்றும் செய்தி சேனல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!