chennireporters.com

#Police Officers Sex Torture. போலிஸ் அதிகாரிகள் செக்ஸ் டார்ச்சர். பெண் போலீஸ் ராஜினாமா.

போலீஸ் அதிகாரிகள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் தருவதால் திருச்சி ரயில்வே போலீசில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம், Maintenance work at Trichy railway station: Change in train servicesரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனக்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர் விபரங்களை பட்டியலிட்டு உயர் அதிகாரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ரயில்வே போலீசில் திருச்சியில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முத்துச்செல்வி திருச்சி ரயில்வே எஸ்.பி. க்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பல அதிர்ச்சி தரும் செய்திகளை கூறியுள்ளார். என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கணவர் கூட்டுறவு துறையில் கொடைக்கானலில் பணிபுரிகிறார்.  எழுத எங்களுக்கு பிளஸ் ஒன் மற்றும் முதல் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஏழு ஆண்டுகளாக பழனி ரயில்வே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தேன்.villupuram purulia express extended to nellai: தென் மாவட்ட பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சர்ப்ரைஸ்! முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை வரை நீட்டிப்பு!கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி திருச்சிக்கு மாற்றப்பட்டேன். மூத்த மகள் மார்ச் ஐந்தாம் தேதி பொது தேர்வு எழுத இருக்கிறார். இரண்டாவது மகளுக்கு 5 வயதாகிறது. முழு ஆண்டு தேர்வு முடியும்போது பணியிடம் மாறுதல் செய்திருந்தால் மகள்களை வேறு பள்ளிக்கு மாற்றி இருப்பேன். என் குடும்ப சூழ்நிலை கருதி தங்களை சந்தித்து எனக்கு அயல் பணியாக பழனி ரயில்வே போலீசில் நிலையத்தில் பணி வழங்க கோரிக்கை மனு அளித்தேன். நீ அதிகாரிகளை எதிர்த்து பேசுகிறாய் அதனால் தான் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினீர்கள். நான் தேவையில்லாமல் எந்த அதிகாரியையும் எதிர்த்துப் பேசவில்லை.பழனியில் இன்றைய நிகழ்வுகள்

 

பழனியில் அயல் பணி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தூய மணி வெள்ளைச்சாமி திண்டுக்கல் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார் அவர் எனக்கு நீதிமன்ற அலுவல் பணி ஒதுக்கினார் அப்பணியை செய்து வந்தேன் அதன் பின் அலுவல் தாண்டி தனிப்பட்ட முறையில் மொபைல் போனில் தன்னிடம் பேசும்படி மிரட்டினார். அதற்கு நான் உடன்படவில்லை. இந்த தருணத்தில் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமிக்கு வேண்டிய சிறப்பு எஸ்ஐ மணிகண்டன் பழனி ரயில்வே போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார். அவரும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற செயலில் ஈடுபட்டார்.இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைசாமி சொல்படி நடந்து கொள்ள வேண்டும் மறுத்தால் ரிப்போர்ட் அடித்து உங்களை பணியிட மாறுதல் செய்து விடுவோம் என்று மிரட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பழனி ரயில் நிலைய நடைமேடை காவல் பணியில் இருந்த நாகலட்சுமி என்ற காவலரை மது போதையில் இருந்த ஒருவர் தாக்கினார் அவர் மீது நடவடிக்கை எடுக்காததாலும் நாகலட்சுமியின் சிகிச்சைக்கு உதவாத உதவி செய்யாததாலும் மணிகண்டனை எதிர்த்துப் பேசினேன்.பெண் போலீசாரில் நடத்தை குறித்து அவர் கீழ்த்தரமாக பேசினார். அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து எல்லா பெண் காவலர்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் பழிவாங்கப்பட்டுள்ளேன். இந்த உண்மையை உங்களிடம் தெரிவிக்க விடாமல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரும் செயல்படுகிறார். மிகுந்த மன உளைச்சல் காரணமாக என் பணியை ராஜினமா செய்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முத்துச்செல்வி கூறியுள்ளார். இந்த கடிதம் தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆனையர் தனக்கு கீழ் பணியாற்றும் சில பெண் காவலர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தற்போது அவரை பணி இடை நீக்கம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக விசாகா கமிட்டியில் சில மாற்றங்களை செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

இந்த நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் பெண் போலீசாருக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம். தேவையில்லாமல் போலீஸ் அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக காவல்துறையில் பெண் போலீஸ் சாருக்கு பாலியல் தொந்தரவு தரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதை விட அவர்களை நிரந்தர பணியிடை நீக்கம் செய்து அவர்களை பாலியல் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய வேண்டும் என்ற புதிய கோரிக்கை போர் குரலாக தமிழக காவல்துறையில் எழுந்துள்ளது.தன் வீட்டில் இருக்கும் பெண்கள் தனது மகள்கள் சகோதரிகளைப் போல போலீஸ் அதிகாரிகள் தங்களுடன் பணியாற்றும் பெண் காவலர்களை நினைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் உயர் பெண் போலீஸ் அதிகாரிகள். தன்னுடன் பணியாற்றும் பெண் காவலர்களை நண்பர்களாகவும் சகோதரிகளாகவும் நடத்தினால் தான் பாலியல் குற்றங்கள் நடக்காது என்கிறார் ஓய்வு பெற்ற பெண் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இதையும் படிங்க.!