chennireporters.com

வாணியம்பாடி ரௌடிக்கு மாவுகட்டு போட வைத்த போலீஸ்.

கொலையாளி தாஜுதீன்.

பரபரப்பான வாணியம்பாடி வாசீம் அக்ரம் கொலை வழக்கில் பிடிபட்ட கூலிப்படையை சேர்ந்தவர்களை சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியில் ஜீவா நகரில் கடந்த ஜூலை மாதம் சில இடங்களில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அதிரடியாக நியூ டவுன் ஜீவா நகர் பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது டீல் பிரதர்ஸ் இம்தியாஸ் என்பவர் குடோனில் பத்துக்கும் மேற்பட்ட கத்திகள் இரண்டு துப்பாக்கிகள் 8 கிலோ கஞ்சா 10 செல்போன்கள் ஆகியவற்றை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி பறிமுதல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ரஹீம்,பசூல்,சலாவுதீன் மற்றும் கரண் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் என்பவரை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து தேடி வந்தார்.எஸ்.பி. சிபிசக்கரவர்த்தியிடம் சிக்கி விடாமல் இருக்க தலைமறைவாக இருந்த டீல் பிரதர்சை விரைவில் பிடிக்க வேண்டுமென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தார்.

எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி

வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த இடங்களிலும் கொலை, கொள்ளை, நடக்காத வண்ணம் போலீசாரை முடிக்கிவிட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி எந்த விதஅசம்பாவி தங்களும் நடக்கவிடாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இம்தியாஸ் கடந்த 10-ம் தேதி வாணியம்பாடி பள்ளி வாசல் முன்பு முகமது வாசிம் அக்ரம் என்பவரை கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் என்பவர் கூலிப்படையை வைத்து வாசீமை கொலை செய்தார்.

இந்நிலையில் சரண்டரான கொலையாளி களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இந்த கொலையில் முக்கிய எதிரியான பீபா என்ற தாஜுதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரை கைது செய்ய முயன்ற போது தப்பி ஓடி தடுக்கி விழுந்தார்.அப்போது அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க.!