பொத்தேரி தனியார் விடுதி மற்றும் எஸ்.ஆர்.எம். srm college யில் 1000 போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள் அந்த சோதனையில் போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் , கஞ்சா, ஹூக்கா, ஹான்ஸ், காண்டம், மது பாட்டில்கள் என பல வகையான பொதை வஸதுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவத்தில் தொடர்புடைய 1000 மாணவர்களிடம் பொலிசார் விசாரணைநடத்தி வருகின்றனர். பொத்தேரியில் உள்ள தனியார் விடுதியிலும் போலீசார் சோதனை செய்தனர்.
கஞ்சா வியபாரி ஏ+ பிரிவு ரவுடியான செல்வமணி .
பொத்தேரியில் 600 பேர் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதியில் (சனிக்கிழமை) காலை போலீசார் சோதனை நடத்தினர். போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 30 கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர்அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ்
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதால் சமூக விரோத செயல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ‘அபோட் வேலி’ என்ற பெயரில் சுமார் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இங்கு தங்கி உள்ளனர் ஒரு வீட்டை வாடகைக்கு இருங்கள். இந்த விடுதி அருகே தனியார் கல்லூரி இயங்கி வருவதால், அங்கு படிக்கும் மாணவர்களும் இங்கு தங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது.
இதன்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் சனிக்கிழமை காலை சுமார் 1000 போலீசார் அந்த தனியார் விடுதியின் 500 அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 2 கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட்கள், 20 மில்லி கஞ்சா எண்ணெய், 5 போங்க்ஸ், 1 புகைபிடிக்கும் பாகம், 7 ஹூக்கா மெஷின்கள், 7 கிலோ ஹூக்கா பவுடர் வெளிநாட்டு மது பாணங்கள், காண்டம்கள், ஹான்ஸ், குட்கா, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது 30 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா ஏ+ பிரிவு ரவுடியான செல்வமணி (29) என்பவர் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. அப்போது கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கியிருந்த நந்திவரத்தை சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா மற்றும் 4 பெல்ட் கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செல்வமணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் பெருகியதாகக் கூறி தனியார் விடுதியில் ஒரே நேரத்தில் ஆயிரம் போலீஸார் சோதனை நடத்தியது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அபோட் வேலி அபார்ட்மெண்ட்
எஸ் ஆர் எம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கும் என்று கூட சொல்லுகிறார்கள் அந்த பகுதியில் உள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள்.
எஸ்.ஆர்.எம். srm college யில் 50 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் வெளி நாடு வெளி மாநில மக்கள் படித்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது மறைமலைநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.ஆர்.எம். srm college குழும கல்வி நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஒழுக்க கட்டுப்பாடு இல்லாமல் கேளிக்கை விடுதிகள் போல செயல்பட்டு வருகிறது.
இதை ஒன்றிய அரசின் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள். அரசு இதில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை . நடவடிக்கை எடுப்பாரா? முதலமைச்சர்.!!