chennireporters.com

மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார்.

கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவை திறக்கப்படாமல் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனைத்து கடை களையும் திறக்க அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து கோவையில் பல இடங்களில் அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது இளம் பெண்களை வைத்து ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள எஸ்.ஆர் காம்ப்ளக்சில் 3 வது மாடியில் செயல்பட்டுவரும் அழகு நிலையத்தில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து பெண்கள் அழகு நிலையத்தை நடத்தி வந்த சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ் என்ற விஜய் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நாகாலந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் இரண்டு பேரையும் மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது போல பீலமேடு மசகாலிபாளையம் சாலையில் உள்ள எஸ்.பி.எஸ் கிராண்ட் ஹோட்டலில் நான்காவது மாடியில் செயல்பட்டுவரும் மசாஜ் சென்டரில் பீளமேடு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இதையடுத்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் செந்தில்குமார் என்பவரின் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த புளியங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி ஆகிய இரண்டு பெண்களையும் போலீசார் நேற்று காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கோயமுத்தூரில் பல முக்கிய வி.ஐ.பி பகுதிகளில் மசாஜ் சென்டர் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

இதையும் படிங்க.!