chennireporters.com

#pombala por..kii inspector; அமைச்சர் பெயரை அசிங்கப்படுத்தும் பொம்பள பொ…க்கி இன்ஸ்பெக்டர்.

கடந்த ஆண்டு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த சுகுமாரன் காவல் நிலையத்தில்

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை... போலீசார் விசாரணை | Etamilnews

புகார் கொடுக்க வந்த பெண்ணையே சேலையை உருவி பாலியல் டார்ச்சர் கொடுத்த, விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 9 – மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிக்கு வந்த பிறகு கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், லாட்டரி சீட்டு, ஒயின் ஷாப் பார்,இப்படி எண்ணற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்து அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் சாமானிய மனிதர்களை மிரட்டுவது, அவதூறாக பேசுவது சாதி குறித்து பேசுவது, என எல்லா குற்றசெயல்களையும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் செய்து வருகிறார்.

குறிப்பா, கடந்த மாதம் நவம்பர் 1- தேதி கந்தர்வகோட்டை அருகே இருக்கும் அரியாணிப்பட்டி என்ற கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் சுகுமாரன் திட்டமிட்டு தடயங்களை மறைத்தார்.

இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.

பின்னர் அந்த விசாரணையை வேறு பக்கம் திசை திருப்பி எதிரிகளியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சம்பவத்தில் ஈடுபடாதவர்களை கைது செய்து கணக்கு காட்டியது, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களை ஊடகங்களுக்கு கொடுக்காமல் மறைத்தது இப்படி வெளியே வராத எண்ணற்ற சம்பவங்கள் உள்ளது.

 

காவல் ஆய்வாளர் சுகுமாரனின் சட்டவிரோத போக்கை கண்டித்து கந்தர்வகோட்டை அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பாக பேராசிரியர் கோ. ஆறுமுகம் தலைமையில் அதாவது வியாழக்கிழமை அன்று 14.11.2024 தேதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இருந்த நிலையில்,  ஆய்வாளர் சுகுமாரன் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியை மறுத்துவிட்டார்.

பேராசிரியர் கோ. ஆறுமுகம்.

பேராசிரியர் ஆறுமுகம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்ல இருந்த நிலையில், 13.11.2024 அன்று இரவு 8 மணி அளவில் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான போலீஸ் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று, அத்துமீறி உள்ளே நுழைந்து அடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் வைத்து , செல்போனை பறித்து அதில் உள்ள அனைத்து ஆவணங்களையும் அழித்து, கந்தர்வகோட்டை நடுவர் மன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

போலிசாரின் வழக்கு அறிக்கைகளையும் காவல் ஆய்வாளர் சுகுமாரனின் சட்ட விரோத போக்கை தெரிந்து கொண்ட  நீதிபதி ஆறுமுகத்தை தனது சொந்த பிணையில் விடுவித்து விட்டார். நீதிபதி சொந்த பிணையில் விட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆய்வாளர் சுகுமாரன். மீண்டும் ஆறுமுகத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து முகத்தில் குத்தியதில் நாலு பற்கள் உடைத்துவிட்டது.

தற்போழுது ஆறுமுகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நீதிமன்றம் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டரை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

TN Minister Anbil Mahesh Poyyamozhi rushed to Krishnagiri hospital, referred to Bangalore - The Hindu

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இவர் செய்யும் எல்லா பிராடுத்தனங்களுக்கும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றன காரணம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உறவுக்காரர் என்று சொல்லி வருகிறார்.

தவறுகளை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக போராடுபவர்களை சாதியின் பெயர் சொல்லி வன்மத்தோடு சமூகத்தில் நல்ல அந்தஸ்து உடைய பேராசிரியர் கோ ஆறுமுகத்தை சாதியின் பெயர் சொல்லி அடித்து பற்களை உடைத்த சாதி வெறியன் இன்ஸ்பெக்டர் சுகுமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் எழுத்தாளர் துரை குணா நம்மிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!