பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக சிவாஜிலிங்கம் கைது! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26ஆம் நாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெற்ற விழாவிற்குத் தலைமை தாங்கி கேக் வெட்டியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்ததோடு, அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்து சனநாயக உரிமைகளைப் பறித்துள்ள சிங்கள அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.
இலங்கையின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள திசாநாயக்காவின் இந்த நடவடிக்கை அவரது முகமூடியைக் கிழித்து எத்தகைய கொடிய சர்வாதிகாரி அவர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் அவர்களின் மீதே இத்தகைய ஒடுக்குமுறை ஏவப்படுமானால், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்னவாகும்? என்ற கவலை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராகக் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என உலகத் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.சிவாஜிலிங்கத்தை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.உலகம் முழுவதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உலகத்தில் எந்த நாடுகளிலும் பிறந்தநாள் கொண்டாடியதற்காக யாரையும் கைது செய்யவில்லை.ஆனால் இன்னும் எதைச் அதிகார மையத்தின் அம்சமாக இலங்கை ராணுவம் செயல்படுவது சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது. மீண்டும் ஒரு ஈழ போர் உருவாகும் சூழலை சிங்கள ராணுவத்தினரும், சிங்கள அரசாங்கமும் செய்து வருகிறது என்று தோன்றுகிறது.மீண்டும் ஈழத்தின் விடுதலையை மீட்க தலைவர் வருவார் என்கிற கோஷம் முன்வைக்கப்படுகிறது. தலைவர் இல்லை என்றாலும் கூட யாரோ ஒருவர் மூலம் ஈழத்தின் விடுதலைக்காக ஒரு போர் நடக்கும் விரைவில் உலகெங்கும் பிரிந்து கிடக்கும் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவார்கள் என்கின்றனர் சர்வதேச புலிகள் அமைப்பினர்.